(ஹெட்டி றம்ஸி)
1990 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளால்
துப்பாக்கி முணையில் துரத்தப்பட்ட மன்னார் மாவட்ட முசலி
பிரதேச செயலகத்திற்குட்பட்ட மறிச்சுக்கட்டி, பாலக்குளி, கரடிக்குளி, கொண்டச்சி, கூளாங் குளம், முசலி,
புதுவெளி கிராமமக்களது மீள்குடியேற்ற பிரச்சினை கள் இன்றளவும் ஓய்ந்தபாடில்லை.
சுமார் 23 வருடங்களாக புத்தளம், அநுராதபுரம், வவுனியா போன்ற மாவட்டங்களில்
அகதிகளாக வாழ்ந்த நிலையில் 2002 ஆம்
ஆண்டு யுத்தநிறுத்த காலப்பகுதியில் மீண்டும் சிலர் தங்களது பூர்வீக
இடங்களில் பிரசன்னமாகி விவசாயப் பயிர்ச்செய்கைகளில் ஈடுபடலானார்கள். 2009ஆம் ஆண்டுமே மாதமளவில்
யுத்தம் முடிவிற்கு கொண்டுவரப்பட்டவுடன் அம் மக்கள் தங்களது
பூர்வீக கிராமங்களை நோக்கி வர ஆரம்பித்தார்கள்.
போரினால் தரைமட்டமாக்கப்பட்டிருந்த கிராமங்களில் இராணுவ முகாம்கள் மாத்திரமே
காணப்பட்டன. இம் மக்கள் பரம்பரை
பரம்பரையாக வாழ்ந்து வந்த சுமார் 735 ற்கும்
அதிகமான ஏக்கர் சொந்த நிலங்கள்
மற்றும் அதனை சூழவுள்ள பிரதேசமும்
முள்ளிக்குளம் கிராமமும் கடற் படையினர் முகாம்
அமைத்துக் கொள்வதற்காக கபளீகரம் செய்யப்பட்டியிருந்தன. இராணுவம் கைபற்றியிருந்த காணிக்கு பதிலாக மூவின மக்களுக்கும்
ஒரு குடும்பத்திற்கு அரை ஏக்கர் வீதம்
காணி வழங்கப்பட்டது. ஆரம்பத்தில் வயோதிபர்களுக்கு UN Habited வீட்டுத்திட்டத்தினால்
வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டன. பின்னர்
ஜாஸிம் சிட்டி வீட்டுத்திட்டத்திற் கூடாக
அமைச்சர் றிசாத்தின் தலையீட்டில் வீடுகள் நிர்மானிக்கப் பட்டன.
90ல் வெளியேற்றப்பட்ட 400ற்கும் மேற்பட்ட குடும்பங்கள்
போருக்குப்பிந்திய சூழலில் மும்மடங்காக அதிகரித்திருந்ததன்
காரணத்தினால் பூர்வீக நிலங்களையும் இராணுவத்திற்கு
தாரைவார்த்த அம்மக்களுக்கு சொந்த காணிகள் காணப்படவில்லை.
இதனால்
ராஜபக்ஷ அரசாங்க காலப்பகுதியில் இம்மக்கள்
வனப்பாதுகாப்பு திணைக்களத்திற்கு சொந்தமான சரணாலய வலயத்தி ற்கு
உட்படாத காணிகளில் குடி அமர்த்தப்பட்டார்கள்.
படிப்படியாக
குடியேறிக்கொண்டிருந்த இம் மக்களது மீள்குடி
யேற்றத்திற்கு பொதுபலசேனா வின் இனவாத பிரச்சாரங்கள்
தட ங்கள் விளைவித்தன.
வில்பத்து
சரணாலயம் அழிக்கப்பட்டு அங்கு முஸ்லிம்கள் மீள்
குடியேற்றம் செய்யப்படுவதாக பிரச்சாரம் செய்தது. அதனை தொட ர்ந்து
8 மாதங்களின் பின்னர் தற்பொழுது வில்பத்து
சரணாலயத்தை பாதுகாப்போம் எனும் தொனியில் முகநூல்
புரட்சியொன்று கடந்த இரண்டு மாதங்களுக்கு
முன்னர் தொட்டு இடம்பெற் றுவந்தது.
கடும்போக்குவாத சிந்தனை படைத்த இனவாத
அமைப் புக்களும் கூடவே அதற்கு தீனி
போட்டன.
அரசியல்
சுய இலாப நோக்கில் செயற்படும்
ஊடகங்களும் அதற்கு பக்கவாத்தியம் இசைத்தன.
விச யம் சூடு பிடித்தது.
தென்னிலங்கை சிங்கள மக்கள் பீதி
அடைந்தார் கள். சுற்றால் அமைப்புக்களும்
போராட்டத்தில் குதித்தன.
ஜே.வீ.பியும் தனது
சிதைந்து போன அரசியல் இமேஜை
தென் னிலங்கைக்குள் தக்கவைத்துக்கொ ள்ளும் நோக்கில் வில்பத்து
பிரதேசத்தில் சுற்றுப் பயணங்களையும் மேற்கொண்டு இருந்தது. விடயம் ஜனாதிபதியின் கவனத்திற்கு
கொண்டு செல்லப்பட்டது. உடன டியாக மீள்
குடியேற்றம் இடை நிறுத்தப்பட்டது. சுற்றாடல்
அமைச்சின் செயலாளருக்கு அறிக்கை சமர்பிக்குமாறு பணிப்புரை
விடு க்கப்பட்டது. 2015.11.05 ஆம் திகதி அவர்
தனது அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளித்தார். அதில், மீள் குடியேற்றத்திற்காக
வில்பத்து வன பிரதேசத்திலிருந்து விடுவிக்கப்பட்ட
2500 ஏக்கர் காணியிலேயே மீள் குடியேற்றம் இடம்பெற்றுள்ளது
என்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
மன்னார்
மாவட்ட அரசாங்க அதிபரும் வில்பத்து
வனப்பிரதேசத்தில் மீள்குடியேற்றம் நடை பெறவில்லை என்பதாக
தெரிவித்திருந்தார். இனவாதத்தின் இமயம் எனச் சொல்லப்படுகின்ற
சம்பிக்க ரனவக்கவும் கூட வில்பத்து சரணா
லயம் அழிக்கப்படவில்லை கல்லாறு வனப்பகுதியிலேயே மக்கள்
குடி அமர்த்தப்படுகிறார்கள். மறிச்சுக்கட்டி அபய பூமி என்றால்
பொறலஸ்கமுவ, அநுராதபுரம், ஹம்பாந்தோட்டையில் அழிக்கப்பட்டுள்ள காணிகளும் அபய பூமி தான்.
அப்படி என்றால் நாம் எல்லாவற்றையும்
பாதுகாக்க வேண் டும் என்றார்.
சம்பிக்கவின் கருத்தின் படி நோக்கும் போது
வனப் பாதுகாப்பு திணைக்களத்திற்கு சொந்தமான நிலங்கள் கல்லாற்றுப்பிரதேசத்தில் மாத்திரம் பயன்படுத்தப்படவில்லை. முழுமொத்த மகாவெலி L வலயத்திலும்
வன பாதுகாப்பு திணைக்களத்திற்குச் சொந்தமான நிலங்களே பயன்படு த்தப்பட்டுள்ளன. ஆனால்
இது தொடர்பில் குரலெழுப்புவதற்கு யாரும் முன்வருவதில்லை.
உண்மையில்
ராஜபக்ஷ அரசாங்க காலப் பகுதியில்
வில்பத்து சரணாலய வலயத்திற்கு அருகாமையில்
வேரதென்ன, போகஸ்வெவ-1, போகஸ் வெவ - 2, நாமல்கம,
சேனலீன்கம, நந்திமித்ரகம எனும் பெய ர்களில்
புதிதாக 6 சிங்கள கிராமங் கள்
உருவாக்கப்பட்டு அங்கு 2860 சிங்கள குடும்பங்கள் குடியமர்த்த
ப்பட்டுள்ளன. இதில் ஒரு குடும்பத்திற்கு
தலா 3 ஏக்கர் காணி வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் குரலெழுப்புவதற்கு எவரும் இல்லை. இது
போன்றுதான் பூக் குளம் கிராமும்.
அவர்கள் இன்று நேற்று குடியமர்தப்பட்டவர்கள்
அல்ல. அவர்கள் 90 ற்கு முற்பட்ட காலம்
தொட்டே வில்பத்து சரணாலய வலயத்திற்குள் வசிக்கின்றார்கள்.
முசலிப் பிரதேச மக்கள் வில்பத்து
சரணாலயத்திற்கு அண்மித்த கல்லாறு வன பிரதேசத்தில்
மீள் குடியேறுவது இவர்களுக்கு பிரச்சினையாக தென்படுகிறது என்றால் வில்பத்து சரணாலயத்திற்கு
அண்மித்த சில நிலங்களை ஒரு
சில அரசியல் வாதிகள் அவர்களுடைய
சுய தேவைகளுக்காக கையகப் படுத்திருப்பது இவர்களுக்கு
பிரச்சினையாக தென்படுவதில்லை.
வனாத்த வில்லு பிரதேசத்திற்கூடாக
வில்பத்து சரணாலயத்தை அழித்து அமைச்சர் சரத்
அமுனுகமவின் மைத்துனன் விவசாய நிலம் ஒன்றை
அமைத்துள்ளார். சில வருடங்களுக்கு முன்னர்
பாதுகாப்பு அமைச்சினால் பொலனறுவையிலுள்ள சோமா வதிய அபய
பூமியின் பத்தாயிரம் எண்ணிக்கையிலான ஹெக்டயார் நிலங்கள் கிரிக்கட் வீரர்களான முத்தையா முரளிதரனுக்கும், பிரமோதய விக்ரமசிங்கவிற்கும் அவர்
களுடைய வெளிநாட்டு முதலீட்டு அமைப்பான “டோலே” நிறுவன த்திற்கும்
ஒப்படைத்த பொழுது இனவாதிகளும் சூழலியளாளர்களும்
எங்கிருந்தார்கள்?
சோமாவதிய
அபய பூமி வனப் பகுதியில்
11,600 ஏக்கர் நிலம் அழிக்கப்பட்ட பொழுது,
ஹிறு, சக்தி ஊடக நிறுவனங்கள்
துயில் கொண்டிருந்தனவா? இதுபோக கடந்த ராஜபக்ஷ
அரசாங்கம் குறித்த டோலே நிறுவனத்திற்கு
கந்தளாய் சுன்னக்காடு சரணாலய பகுதியில் 15000 ஏக்கர்
நிலத்தையும் ஊவா குடா ஓயாவில்
3000 ஏக்கர் நிலத் தையும் புத்தளையில்
500 ஏக்கர் நிலத்தையும் வழங்கியுள்ளது. இவை அனைத்தும் சரணாலய
வலய அரச வனப்பகுதிகளுக்கு சொந்தமான
நிலங்கள். இன்னும் வவுனியா வெளி
ஓயாவில் ஆயிரத்திற்கும் அதிகமான ஏக்கர் நிலங்கள்
அழிக்கப்பட்டு அங்கு சிங்கள குடியேற்
றங்கள் மேற்கொள்ளப்பட்டன. வில்பத்துவை அண்மித்த வகையில் கஜுவத்தை எனும்
சிங்கள கிராமம் ஒன்றும் உருவாக்கப்பட்
டுள்ளது. முசளி பிரதேசத்திலுள்ள கொண்டச்சி
கிராமத்திற்கு அருகாமையில் புதிதாக 1500 சிங்கள குடி யேற்றங்கள்
நிறுவப்பட்டுள்ளன.
வலிச்சயம்,
சோளமோட்டை விவசாய காணிகளில் கற்கள்
குவி த்து எல்லைகள் உருவாக்கப்பட்டு
அப்பகுதிகளுக்குச் செல்ல முடியாதவாறு வனஜீவராசிகள்
திணைக்க ளம் கையகப்படுத்தி கொண்டுள்
ளது. வியாயடிகுளத்திற்கு பக்கதிலுள்ள பல காணிகள் கடற்படையினரால்
பராமரிக்கப்பட்டு வருகின்றன. முசலி பிரதேசத்திற்குட்பட்ட முள்ளிக்குளம் கிராமம்
கடற்படையினரால் அபகரிக்கப்ப ட்டு அங்கு கடற்படை
முகாம் நிறுவப்பட்டுள்ளது. போருக்கு பிந்திய சூழலில் பாதுகாப்பு
காரணங்களை சுட்டிக்காட்டி இராணு வம் அப்பாவி
மக்களின் காணிகளை கைப்பற்றியது.
யாழ்குடா
நாட்டில் அவ்வாறு சுமார் 7000 ஏக்கர்
காணி கைப்பற் றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இராணுவம் கையகப்படுத் திய நிலங்களில் ஆடம்பரமான
கொட்டல்களும், கோழ்ப் மைதா னங்களும்
விவசாய திட்டங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. மத்தளை விமான நிலையம்,
சூரியவெவ விளையாட்டு மைதானம், ஹம்பாந்தோட்டை துறைமுகம், ரன் மினித்தென்ன திரைப்பட
கிரா மம் போன்ற எல்லாத்திட்டங்க
ளும் மிருகங்கள் வசிக்கின்ற, பெறுமதியான மரங்கள் செறிந்துள்ள அரச
நிலங்கள் அழிக்கப்பட்டே மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இவையெல்லாம்
இவர்களுக்கு பிரச்சினையாக தென்படுவவில்லை. ஏனென்றால், அவை அனைத்தும் பௌத்தர்களோடு
சம்பந்தப்பட்ட விடயங்கள். இனவாத பௌத்த அமைப்புக்கள்
அவற்றைத் தட்டிக்கேற்பதில்லை. பலாங்கொடை, கூரகல பகுதியின் 52 ஏக்கர்
காணியில் வசிக்கும் சட்டவிரோதக் குடியேற்றக்காரர் களை (முஸ்லிம்களை) அகற்றாது
போனால், தற்கொலை செய்து கொள்ளப்போவதாக
சிஹல ராவயவின் தேசிய அமைப்பாளரான அக்மீமன
தயாரத்தன தேரர் அண்மையில் அச்சுறுத்தல்
விடுத்திருந்தார். கடந்த 16ஆம் திகதி
வில்பத்து பகுதிக்கு விஜயம் செய்த 200 இளம்
பௌத்த பிக்குமார்கள் மோதரகம ஆற்றுப் பாலத்தின்
மேல் உக்கார்ந்து கும்பிட்டு ஆராதனை செய்து முஸ்லிம்கள்
காடு அழிப்பதாக கூறப்படுகின்ற வனப் பகுதியில் மரங்களை
நட்டியுள்ளனர்.
இவையெல்லாச்
செயல்களும் முஸ்லிம்களின் பூர்வீக அடையாளங்களை அழிப்பதற்காக
மேற் கொள்ளப்படும் செயற்பாடுகள். வில்பத்தை அண்மித்த பகுதிகளில் வன ஜீவிகள் பாதுகாப்பு
வலயமாக அறிவிக்கப்பட முன்னர் தொட்டு மக்கள்
பூர்வீக குடிகளாக சிறுசிறு கிராமங்களில் வாழ்ந்தமைக்கான வரலாற்றுச் சான்றுக ளும் உள்ளன.
500 வருட வரலாற் றைக் கொண்ட
இம் மக்கள் தற் பொழுது
6 ஆவது தலைமுறையாக வும் அப்பகுதிகளில் மீள்குடியேறி
மிகுந்த கஷ்டங்களை எதிர் கொள் கின்றனர்.
இடம்பெயர்ந்தவர்க ளுள் பெரும்பாலானோர் இன்னும்
மீளக் குடியமர்த்தப்படவில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக சொந்தங்கள் சிதறிக்கிடக்கின்றன. மின்சார வசதிகள் முழுமையாக
பூர்தி செய்யப்படவில்லை. குடிநீர்ப்பிரச்சினை முக்கியமானதொரு பிரச்சினையாக முன்வைக்கப்படுகிறது. பல வீட்டுத்திட்டங்கள் அமைக்கப்பட்டாலும்
அங்கு குடி நீர் வசதிகள்
செய்து கொடுக்கப்படவில்லை. குழாய் நீர் கிணறுகள்
மூன்று மாதங்களே தாக்கு பிடிப்பதாக மக்கள்
விசனம் தெரிவிக்கின்றனர். போக்குவரத்து சிக்கல்களையும் மக்கள் அங்கு எதிர்
கொள்கின்றனர். இரண்டு பஸ் வண்டிகள்
மாத்திரமே சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. காலை 6 மணிக்கு கரடிக்குளியிலிருந்து
சிலா வத்துறைக்கும் மதியம் 1 மணிக் கும் புத்தளம்
நோக்கியும் ஒரு பஸ் பயணமாகும்.
அவை அல்லாத நேரங்களில் மக்கள்
சொந்த வாகனங்களை வைத்தே பயணம் செய்ய
வேண்டும். கல்லாறு, உப்பாறு, பெருக்கெடுக்கின்ற பொழுது மக்கள் கிராமத்தை
விட்டு வெளியேற முடியாத நிலை
அங்கு உருவாகி ன்றது. இந்நேரத்தில்
நோயாளிகள், கர்ப்பினித்தாய்மார்களை மருத்துவ மனைக்கு அழைத்து செல்வதில்
கடல் மார்க்கத்தை பயன்படுத்த வேண்டியுள்ளது. அடிப்படை வசதிகள் இன்மையால் மக்கள்
கல்வியிலும் பின்னடைவை சந்தித்துள்ளனர். பாடசாலையில் ஆசிரியர் பற்றாக்குறையும் சுகாதார ரீதியில் மருத்துவர்
இன்மையும் பாரிய பிர ச்சினையாக
நோக்கப்படுகின்றது.
மீள்
குடியேற்றத்தின் பின்னர் இவ்வாறு பல
கஷ்டங்களை எதிர் கொள்கின்ற அம்மக்கள்
ஒரு வகை பீதியில் உரைந்து
போயுள்ளனர். வில்பத்து காடு அழிப்புக் குற்றாச்
சாட்டுக்களுக் கூடாக பேரினவாதிகள் முன்னெடுக்கும்
போராட்ட ங்களும் இம்மக்களை மிகுந்த
மனவேதனைக்கு உட்படுத்தியுள் ளன. தற்பொழுது மீள்குடியேற்ற
மும் தடைப்பட்டுள்ளன. மீள் குடி யேறிய
வடபுல முசலிப் பிரதேச முஸ்லிம்கள்
எதிர்கொள்ளும் இப் பிரச்சினைகளை அற்ப
விடயமாக கருத முடியாது.
இவர்களுடைய
பிரச்சினையை தேசிய பிரச்சினையாக பார்க்கப்ப
டல் வேண்டும். இவை உயர் மட்டத்
தில் கலந்துரையாடப்பட்டு தீர்வு களை பெற்றுகொடுத்தல்
வேண்டும். அது அல்லாமல் வில்பத்துவை
பாது காப்போம் என்பதாக இனவாதிகள் முன்னெடுக்கும்
நிகழ்ச்சி நிரல் களை போசிக்க
கூடாது. எவ்வித அடி ப்படையுமின்றி
ஒரு இனத்தை மாத்திரம் குறி
வைத்து தொடரப்ப டும் இனவாதப்
பிரச்சாரங்கள் உட னடியாக நிறுத்தப்படல்
வேண்டும்.