எதிர்வரும் உள்ளுராட்சி தேர்தல்களின்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரச்சார நடவடிக்கைகளிற்கு ஜனாதிபதியே தலைமை தாங்குவார் என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியிடம் உள்ளுராட்சி தேர்தல் பிரச்சார நடவடிக்கைள் குறித்து கேள்வி எழுப்பிய ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் இதனை தெரிவித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்ச கட்சியிலிருந்து விலகி இன்னொரு அரசியல் கூட்டணிக்கு ஆதரவளிக்கமாட்டார், அவர் ஜனாதிபதி சிறிசேன பிரச்சாரத்திற்கு தலைமை தாங்க அனுமதிப்பார் எனவும் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் சிறிய கட்சிகளின் ஆதரவு இல்லாமல் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தனித்து போட்டியிடும் என்ற ஊகங்கள் காணப்படுவது குறிப்பிடத்தக்கது