( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
சம்மாந்துறை சமூகப் பொலிஸ் பிரிவின் கீழ் செயற்பட்டு வரும் 51 சிவில் பாதுகாப்புக் குழுக்களினதும் கடந்த கால செயற்பாடுகள் மீளாய்வு செய்யப்படுதலும் எதிர்கால முன்னெடுப்புக்கள் எனும் தொனிப் பொருளிலான ஆலோசனை மாநாடு அண்மையில் சம்மாந்துறை அப்துல் மஜீட் நகர மண்டபத்தில் இடம் பெற்றது. சம்மாந்துறைப் பிரதேச செயலாளர் ஏ.மன்சூர், உதவிப்பொலிஸ் அத்தியேட்சகர் காமினி தென்னகோண், சிவில் பாதுகாப்பு மத்திய குழுத் தலைவர் ஐ.ஏ.ஜப்பார், சமூகப் பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரி எஸ்.எம்.அமீர் ஆகியோர் சிவில் பாதுகாப்புக் குழுக்கள் சம்மந்தமான தகவல்களைப் பெற்றுக் கொண்டதோடு கடந்த காலங்களில் இக்குழுக்களின் செயற்பாடுகள் பற்றி மீளாய்வு செய்ததோடு, எதிர்காலத்தில் மேலும் வெற்றிகரமாக இதனைச் செயற்படுத்துவதற்கான முன்னெடுப்புக்களை மாநாட்டில் கலந்து கொண்டவர்களுடன் கலந்துரையாடி திட்டமிட்டனர்.
சம்மாந்துறைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எச்.எம்.உபுல் பியலால் தலைமையில் இடம் பெற்ற இம்மாநாட்டில்; கல்முனைப் பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியேட்சகர் ரி.எம்.ஜே.காமினி தென்னகோண் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
இம்மாநாட்டில் பாதுகாப்பு உயரதிகாரிகள், மும்மதத் தலைவர்கள், மதவழிபாட்டு நிருவாகத்தினர், சிவில் பாதுகாப்புக் குழு உறுப்பினர்கள், கிராம சேவகர்கள், சமூக சேவையாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
எமது செய்திகளை கைத்தொலைபேசி மூலம் பெற
Moto GP News
விளையாட்டு
Showing posts with label Sammanthurai News. Show all posts
Showing posts with label Sammanthurai News. Show all posts
2:17 PM
சிரேஷ்ட சட்டத்தரணி முஸ்தபா அவர்கள் மு.கா தலைமையிடம் அமைச்சுக் கோரிக்கையினை முன் வைத்தார்..!!
கடந்த ஒரு தசாப்த காலமாக சம்மாந்துறை மக்கள் இழந்து தவித்த பாராளுமன்றப் பிரதிநிதித்துவமானது இம் முறை
மன்சூரின் மூலமாக நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது.இம் முறை பாராளுமன்றத்திற்கு தெரிவு
செய்யப்பட்ட மன்சூர் அவர்களினை அம்பாறையில் இருந்து பெருந் திரளான சம்மாந்துறை
மக்கள் ஊர் வலமாக அழைத்து வந்து தங்களது மகிழ்ச்சியினை வெளிப்படுத்தி
இருந்தனர்.இதன் போது சம்மாந்துறை பத்ர்
ஜும்மா பள்ளிவாயலில் விசேட துஆ பிராத்தனை நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந் நிகழ்வில் மௌலவி றம்சின் காரியப்பர் அவர்களினைத் தொடர்ந்து
உரையாற்றிய சிரேஷ்ட சட்டத்தரணியும்,மு.கா உயர்பீட உறுப்பினரும்,முன்னாள் சம்மாந்துறை
பிரதேச சபை எதிர் கட்சித் தலைவருமான முஸ்தபா அவர்கள், வெற்றி வியூகம் வகுத்து சம்மாந்துறை
பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தினை இலகுவாக பெற்றுக் கொள்ள வழி வகை செய்த மு.கா
தலைமைக்கும்,மு.கா தலைமையின் வெற்றி வியூகத்தினை ஏற்று அதன் பின்னால் அணிதிரண்டு
வாக்களித்த மக்களுக்கும் தனது நன்றியினைத் தெரிவித்ததோடு இத் தேர்தலில் தெரிவாகிய
மூன்று உறுப்பினர்களுக்கும் தனது வாழ்த்தினையும் தனது உரையின் ஆரம்பத்தில்
தெரிவித்துக் கொண்டார்.
இவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் சம்மாந்துறை ஊரானது மிகப் பெரிய
சனத் தொகையினைக் கொண்ட ஊர் என்பதனாலும்,சம்மாந்துறை மக்கள் கடந்த ஒரு தசாப்த
காலமாக தங்களது பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தினை இழந்திருப்பதனாலும் அதீத தேவைப்
பாடுகளுடன் உள்ளனர்.இத் தேவைகள் அனைத்தினையும் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் பதவியின்
மூலம் ஒரு குறுகிய காலப்பகுதியினுள் அமைச்சர் மன்சூரினால் நிறைவேற்றிக் கொடுப்பது
மிகவும் சிரமமானது.முஸ்லிம் காங்கிரஸிற்கு கிடைக்கச் சாத்தியமா இராஜாங்க
அமைச்சினையோ அல்லது பிரதி அமைச்சினையோ மன்சூறிற்கு வழங்கினால் அவர் இம் மக்களின்
தேவைகள் அனைத்தினையும் நிறைவேற்றிக் கொடுப்பதற்கு அப் பதவி மிகவும் உறுதுணையாக
அமையும்.
கடந்த 2012ம் ஆண்டு நடைபெற்ற மாகாண சபைத் தேர்தலில் தெரிவான மன்சூரிற்கு அமைச்சுப் பதவியினை பெற்றுக்
கொடுப்பதில் நான் என்னாலான சிரத்தையினை எடுத்திருந்தேன்.எனது இம் முயற்சிக்கு எமது
சம்மாந்துறை மக்கள் போதியளவு ஒத்துழைப்பு வழங்கி இருந்தனர்.அதிலும் குறிப்பாக அலியார்
ஹசறத் அவர்களின் ஒத்துழைப்பு மறக்க முடியாத ஒன்று எனலாம்.அதே போன்று நாம் இவ்
விடயத்திலும் ஒன்று பட்டு செயற்பட வேண்டும்.சம்மாந்துறை
மக்களினதும்,சம்மாந்துறையின் முப் பெரும் சபைகளின் ஒத்துழைப்போடும் மன்சூரிற்கு
அமைச்சினையோ அல்லது பிரதி அமைச்சினையோ பெற்றுக் கொடுப்பதில் என்னாலான முயற்சிகளில்
ஈடுபடுவேன் என்பதை கூறிக் கொள்கிறேன்.
மு.கா தலைமையிடம் சம்மாந்துறை மக்களின் அளப் பெரிய தேவையினை
நிறைவேற்றிக் கொள்ள பாராளுமன்றம் தெரிவாகியுள்ள மன்சூரிற்கு இராஜாங்க அமைச்சினையோ
அல்லது பிரதி அமைச்சினையோ வழங்க வேண்டும் என்ற கோரிக்கையினை நான் இவ்விடத்தில் சம்மாந்துறை
மக்கள் சார்பாக முன் வைக்கின்றேன்.முஸ்லிம் காங்கிரசிற்கு கிடைக்கச் சாத்தியமான
அமைச்சு,பிரதி அமைச்சுக்களினை யாருக்கு வழங்குவது? என்பதன் சாதக பாதகங்களினை
ஆராயும் போது சம்மாந்துறை மக்களின் தேவைகளுக்கு முன்னுரிமை வழங்கி மன்சூரிற்கு
அமைச்சினை அல்லது பிரதி அமைச்சினை வழங்கும் என தான் நம்புவதாகவும் கூறி தனது
உரையினை நிறைவு செய்தார்.
ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை.
2:12 PM
நோன்புப் பெருநாள் தொழுகை
(எம்.சி.அன்சார் )
புனித நோன்புப் பெருநாள் தொழுகை காலை 6.45மணியளவில் சம்மாந்துறையிலுள்ள 7 ஜூம்மா பள்ளிவாயல்களிலும் மற்றும் மைதானங்களிலும் இடம்பெற்றிருந்தது.
அம்பாரை பிரதான வீதியிலுள்ள அல்மர்ஜான் மகளிர் கல்லூரியின் திறந்த வெளி மைதானத்தில் இடம்பெற்ற தொழுகையின் போது ஆண், பெண் இருபாலாரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.
6:47 PM
நோன்புப்பெருநாள் தொழுகை
(பர்ஹான்) ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் சம்மாந்துறைக் கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்ட புனித நோன்புப் பெருநாள் தொழுகை பெருநாள் தினத்தன்று காலை 6.30மணியளவில் அம்பாரை பிரதான வீதியிலுள்ள அஷரபா வட்டை திறந்த வெளி மைதானத்தில் நடைபெற்றது.
10:28 AM
பள்ளிவாசல் நிருவாக உறுப்பினர்களுடனான கலந்துரையாடல்.
பலரது விமர்சனங்களுக்குள்ளான சம்மாந்துறை மற்றுமொரு அரசில் பிரவேசம் யூ.நபீர் (21.07.14) அஷர் தொழுகையை தொடரந்து சம்மாந்துறை சின்னப்பள்ளிவாசலுக்கு வருகைதந்து பள்ளிவாசல் நிருவாக குழு உறுப்பினர்களுடன் கலந்துரையாடியதுடன் அங்குள்ள குறை நிறைகளை கேட்டுயிருந்தார்.
7:38 PM
“காமரி முதல் கிராம நிலதாரி வரை”வரலாற்று ஆய்வு நூல் வெளியீட்டு நிகழ்வு.
எதிர்வரும் 2014-04-19ம் திகதி சம்மாந்துறை அப்துல் மஜீத் மண்டபாத்தில், சம்மாந்துறையில் பிறந்து விதானையாக கடமையாற்றி மரணித்தவர்களும், ஓய்வுபெற்றவர்களும்,தற்போது சேவையிலுள்ளவர்களதும் அவர்கள் ஊருக்கு ஆற்றிய பணிகளை கௌரவிக்கும் முகமாகவும் அவர்களது வரலாற்றினை ஆய்வுக்குட்படுத்தி “காமரி முதல் கிராம நிலதாரி வரை” எனும் பெயரில் சம்மாந்துறை பிரதேச செயலக கிராம உத்தியோகத்தர்
நலன்புரிச்சங்கத்தினால் வெளியீட்டு வைக்கப்படவுள்ளது.
இந்த நூலினை ஓய்வுபெற்ற நிருவாக கிராம உத்தியோகத்தர் அல் ஹாஜ் எம்.எம்.சலீம் ஜே.பீ. தொகுத்து எழுதியுள்ளார்.
2014-04-19ம் திகதி சனிக்கிழமை மாலை 3.30 மணியளவில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கௌரவ உள்ளுராட்சி மாகாணசபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லாஹ் அவர்களும் கௌரவ அதிதிகளாக கிழக்கு மாகாண சுகாதார சுதேசிய வைத்தியத்துறை அமைச்சர் கௌரவ எம்.ஐ.எம்.மன்சூர் அவர்களும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.எல்.அமீர் அவர்களும் சம்மாந்துறை பிரதேசசபை தவிசாளர் ஏ.எம்.எம். நௌசாட் அவர்களுடன் சிறப்பு அதிதிகளாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் திரு நீல் டீ அல்விஸ் அவர்களும் அம்பாறை மாவட்ட உதவி அரசாங்க அதிபார் திரு கே. விமலநாதன் அவர்களும் சம்மாந்துறை பிரதேச செயலாளர் ஏ.மன்சூர் அவர்களும் சம்மாந்துறை உதவி பிரதேச செயலாளர் ஏ.எல்.லத்தீப் அவர்களும் கலந்து கொள்வதுடன் அதிதிகளாக சம்மாந்துறை நம்பிக்கயாளர்சபை தலைவர் வைத்தியர் எம்.வை.எம்.முஸ்தபா அவர்களும் வீரமுனை ஸ்ரீ சித்தாயாத்தியை பிள்ளையார் ஆலய தலைவர் ஜீ.இராஜகோபாலபிள்ளை ஆகியோரும் கலந்து சிறப்பிக்க உள்ளனர்.
7:56 PM
சம்மாந்துறைப் பிரதேச செயலாளர் ஏ.மன்சூர் தலைமையில் சம்மாந்துறைப் பிரதேச செயலகத்தின் உதவிப் பிரதேச செயலாளர் ஏ.எம்.அப்துல் லத்தீப், சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் எம்.பீ.எம்.ஹூசைன் ஆகியோர்களது மேற்பார்வையின் கீழ் நடைபெறுகின்ற இவ் வர்த்தக கண்காட்சியில் மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
சமுர்த்தி உற்பத்தி வர்த்தக கண்காட்சியும், விற்பணை கூடமும்
சமுர்த்தி உதவி பெறும் அம்பாறை மாவட்ட பயனாளிகளின் உற்பத்திப் பொருள் கண்காட்சியும் சந்தையும் 2013/10/26 ஆம் திகதி சனிக்கிழமை சம்மாந்துறை அல்மர்ஜான் முஸ்லிம் மகளிர்கல்லூரியில் இடம்பெற்றுள்ளது

காலை 08.00 மணிக்கு ஆரம்பமாகிய இக் கண்காட்சியும், சந்தையும் மாலை 06.00 மணிக்கு நிறைவு பெற்றுள்ளது.
8:02 PM
அம்பாறை மாவட்ட ஊடகத்தாரின் குடும்ப சவாரி.
அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனம் ஏற்பாடு செய்த ஊடகத்தாரின் உல்லாச குடும்ப சவாரி (17.08.13) யின் சம்மாந்துறை ஜனாதிபதி விளையாட்டு பயிற்சி நிலையத்தில் தலைவர் மீரா. எஸ்.இஸ்ஸதீன் தலைமையில் இடபெற்றது. இதன்போது போட்டிகளில் பங்குபற்றி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டது.
10:11 PM
கிண்ணியா பிரதேச மக்கள் வியாழனன்று பெருநாள் கொண்டாடியது சரியே: அ. இ. ஜ. உலமா அறிக்கை.
கிண்ணியா பிரதேச மக்கள் வியாழனன்று பெருநாள் கொண்டாடியமையும் ஏனையோர் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் அறிவித்தலின்படி அன்றையதினம் நோன்பை நிறைவேற்றியதும் சரியானதே என அறிவிக்கப்பட்டுள்ளது.
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவுக்கும் கிண்ணியா ஜம்இய்யதுல் உலமாவுக்கும் இடையில் இடம்பெற்ற ஷவ்வால் மாத தலைப்பிறை சர்ச்சை தொடர்பான விரிவான கூட்டம் 27.08.13 நிறைவு பெற்றுள்ள நிலையில் வெளியிடப்பட்டுள்ள கூட்டறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது
ஊடக அறிக்கை
(இவ் அறிக்கை அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா வின் உத்தியோக பூர்வ இணையத்தளத்தில் http://www.acju.lk/ இல் பெறப்பட்டது )
09.10.1434
17.08.2013
---------------------------------------------------------------------------------------------------------------------------------

(இவ் அறிக்கை அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா வின் உத்தியோக பூர்வ இணையத்தளத்தில் http://www.acju.lk/ இல் பெறப்பட்டது )
09.10.1434
17.08.2013
---------------------------------------------------------------------------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபறகாதுஹு
1434 ஷவ்வால் மாத தலைப்பிறை சம்பந்தமாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அதனது கிண்ணியா மற்றும் திருகோணமலை
இலங்கையில் தலைப்பிறை பார்த்தல் தொடர்பாக கடந்த காலங்களில் வேறுபட்ட நிலைப்பாடுகள் இருந்து அதனால் வந்த சர்ச்சைகளை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கோடு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கடந்த 2006ஆம் ஆண்டு சகல தரப்பு உலமாக்களினது அங்கீகாரத்தோடும் உடன்பாட்டோடும் ஐந்து தீர்மானங்களை மேற்கொண்டது என்பதையும் முஸ்லிம் சமூகம் அறிந்துவைத்துள்ளது என நம்புகிறோம்.
இத்தீர்மானங்களின் அடிப்படையிலேயே கடந்த ஆண்டுகளில் தலைப்பிறைத் தொடர்பான முடிவுகள் பெறப்பட்டு வந்தன. இவ்வாண்டு றமழான் மாதத் தலைப்பிறையும் ஷவ்வால் மாதத் தலைப்பிறையும் வழமைபோல் குறித்த தீர்மானங்களின் அடிப்படையிலேயே முடிவ செய்யப்பட்டன. ஆயினும் இம்முறை ஷவ்வால் மாதத் தலைப்பிறை முடிவு செய்யும் விடயத்தில் பிறையை வெற்றுக் கண்ணால் கண்ட சாட்சிகளை உறுதிசெய்யும் விடயத்தில் உலமாக்களுக்கு மத்தியில் முரண்பாடு தோன்றியமை உண்மையாகும்.
இவ்வாறு குறித்த விடயத்தில் சில உலமாக்கள் முரண்பட்ட போதிலும் தலைப்பிறையைக் கண்டதாக கூறிய சாட்சிகளை தீர விசாரித்து உறுத்திப்படுத்தியதைத் தொடர்ந்து பிறையைத் தீர்மானிக்கும் அதிகாரம் பெற்ற பெரிய பள்ளிவாயல் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா முஸ்லிம் சமயப் பண்பாட்டலவல்கள் திணைக்களம் ஆகிய முப்பெரும் நிறுவனங்களையும் பிரதி நிதித்துவப்படுத்துவோரின் ஏகமனதான உடன்பாட்டுடன் இவ்வருட ஷவ்வால் மாதத் தலைப்பிறை 09.08.2013 ஆந்திகதி வெள்ளிக் கிழமை என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இருப்பினும் கிண்ணியாவில் பிறை காணப்பட்டதான செய்தி அப்பிரதேச உலமாக்களோடு 17.08.2013.08.17ஆம் திகதி சனிக்கிழமை கொழும்பில் நடைபெற்ற சந்திப்பின்போது உறுதிபடக்கூறப்பட்டது. பிறைகாணப்பட்டதை உறுதி கொண்ட மக்கள் பெருநாள் கொண்டாடியதை சரியெனவும் மற்றோர் அகில இலங்கை ஜம்இய்யத்துல் அறிவித்தலின்படி நோன்பை நிறைவேற்றியவர்களும் சரியாகவே நடந்துள்ளனர் எனவும் தீர்மானிக்கப்பட்டது.
இது பற்றி உலமா சபைத் தலைவர் அவர்கள் 2013.08.08 ஆம் திகதி 01:00 மணிக்கு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன சேவையில் ஆற்றிய உரையின் சில வார்த்தைகள் கிண்ணியா மூதூர் பிரதேச மக்களுக்கு வருத்தத்தைக் கொடுத்துள்ளது என்பதை உணர்ந்த தலைமையகம் வருந்திக் கொள்கிறது.
இன்ஷா அல்லாஹ் எதிர்காலத்தில் இந்தச் சபையில் தெரிவிக்கப்பட்ட ஆலோசனைகளைக் கருத்திற்கொண்டு செயற்பட இரு சாராரும் இணங்கி இதனை பகிரங்கப்படுத்துவதாக முடிவு செய்யப்பட்டது.
அஷ்-ஷைக் எம்.எம்.ஏ முபாறக்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா
Subscribe to:
Posts (Atom)