News Update :

Follow on twitter

Follow on twitter

ads

ads
<>தற்போது கிடைத்த செய்திகள்>>

sponsored:

sponsored:
Government Job Vacancies, Free Application Form, Private Job Free Application, Courses & Examination

FollowNewsstr SEND 40404

உங்கள் செய்திகளையும் எமக்கெனுப்ப : info@sammanthurai.net

Follow US

Follow US

ads

ads

எமது செய்திகளை கைத்தொலைபேசி மூலம் பெற

Moto GP News

விளையாட்டு

Showing posts with label Sainthamaruthu. Show all posts
Showing posts with label Sainthamaruthu. Show all posts

சாய்ந்தமருது பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட 6 வீதிகள் மக்கள் பாவனைக்காக திறப்பு



(அகமட் எஸ். முகைடீன்)
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் வழிகாட்டலில் ஜெய்க்கா திட்டத்தின் நிதியொதுக்கீட்டின் கீழ் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் வீதி அபிவிருத்தி திணைக்களத்தினால் சாய்ந்தமருது பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட 6 வீதிகள் மக்கள் பாவனைக்காக  (29.12.2014) திறந்து வைக்கப்பட்டன.






சாய்ந்தமருது பிரசேத்தில் காணப்படுகின்ற அதிகமான வீதிகள் குறித்த திட்டத்தின் மூலம் நிர்மாணிக்கப்பட்டது. இதன் மூலம் பிரதேசவாழ் மக்கள் குன்றும் குழியுமான வீதிகளினால் எதிர்கொண்ட பல்வேறுபட்ட அசௌகரிகங்கள் இல்லாமல் செய்யப்பட்டுள்ளன.  

தேசிய தலைவரும் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சருமான .எல்.எம்.அதாஉல்லா பிரதம அதிதியாக கலந்து கொண்டு சாய்ந்தமருது மாளிகைக்காடு வீதி, கல்யாண வீதி, அல்-ஹிலால் வீதி, ஜி.எம்.எம்.எஸ் வீதி, வைத்தியசாலை வீதி, மற்றும் ஒஸ்மன் வீதி ஆகியவற்றை மக்கள் பாவனைக்கா திறந்து வைத்தார்.

இதன்போது அதிதிகளாக கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை, கல்முனை மாநகர முன்னாள் முதல்வரும் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் விஷேட ஆலோசகருமான கலாநிதி சிராஸ் மீராசாஹிப் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மத்திய கிழக்கிலிருந்து விடுமுறையில் வந்திருந்த சாய்ந்தமருது இளைஞர் விபத்தில் உயிரிழந்தார்!

(15.04.2014) அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட அட்டாளைச்சேனையில் புத்தாண்டு தினமான  நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தின்போது இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார்.




சாய்ந்தமருதைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞர் தனது நண்பருடன் கல்முனையிலிருந்து அக்கரைப்பற்று நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தபோது அட்டாளைச்சேனை மீனோடைக்கட்டு பிரதேசத்திலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. வேகக் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் மோட்டார் சைக்கிள் பாதையோரம் இருந்த மின்கம்பத்தில் மோதுண்டதாலேயே இந்த அனர்த்தம் நிகழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மோட்டார் சைக்கிளைச் செலுத்தி வந்த இளைஞரே விபத்தின்போது பலியானார். விபத்தில் பலியானவர் சாய்ந்தமருது-16, ஆலிம் வீதி, ஏ.எம்.சாஜஹான் வீதியைச் சேர்நத எம்.றஸான் என்பவராவார். இவர் தொழில்  நிமித்தம் மத்திய கிழக்கு நாடொன்றில் தொழில் புரிந்து விட்டு விடுமுறையில் வந்த நிலையிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளின் பின் இருக்கையில் பயணித்த அவரது நண்பர் சிறுகாயங்களுடன் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வினோதம்

Comments

அறிவியல்

தொழில்நுட்பம்

 

© Copyright Sammanthurai News 2015| Design by | Published by www.sammanthurai.net | .