News Update :

Follow on twitter

Follow on twitter

ads

ads
<>தற்போது கிடைத்த செய்திகள்>>

sponsored:

sponsored:
Government Job Vacancies, Free Application Form, Private Job Free Application, Courses & Examination

FollowNewsstr SEND 40404

உங்கள் செய்திகளையும் எமக்கெனுப்ப : info@sammanthurai.net

எமது செய்திகளை கைத்தொலைபேசி மூலம் பெற

Moto GP News

விளையாட்டு

Showing posts with label STR-Mahalir Vid. Show all posts
Showing posts with label STR-Mahalir Vid. Show all posts

மகளிர் வித்தியாலயத்தில் இடபெற்ற சிறுவர் தின நிகழ்வு

(ஏ.எம். தாஹாநழீம்- பிரதி அதிபர்)
சம்மாந்துறை முஸ்லிம் மகளிர் வித்தியாலயத்தின்  அதிபர் ரீ.எம். தௌபீக் மற்றும் பிரதி அதிபர் ஏ.எம். தாஹாநழீம் அவர்களின் தலைமையிலும் வழிகாட்டலுடனும் சிறுவர் தினநிகழ்வு 01.10.2013யில் கல்லூரியின் முற்றலில் இடம்பெற்றது.

இந்நிகழ்விற்கு பெரும்பாலானோர் கலந்து கெண்டமை குறிப்பிடத்தக்கது.





சம்மாந்துறை முஸ்லிம் மகளிர் வித்தியாலய மாணவன் புலமைப் பரீட்சையில் 190 புள்ளிகள் பெற்று சாதனை

(பிரதி அதிபர் ஏ.எம். தாஹாநழீம்)

இம்முறை வெளியாகிய புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேற்றில்
சம்மாந்துறை முஸ்லிம் மகளிர் வித்தியாலய மாணவன் அப்துல் றஹீம் முகம்மட் சிஹானுல் ஹனீம் மாவட்டத்தில் 190 புள்ளிகளைப் பெற்று முதலாம் இடத்தினைத் தட்டிக்கொண்டார் இவரின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த கல்லூரியின்  அதிபர் ரீ.எம். தௌபீக், பிரதி அதிபர் ஏ. எம்.தாஹாநழீம் மற்றும் ஆசிரியையான ஏ.பீ. பரீதா ஆகியோர் அயராது உழைத்தார்கள் என்றும் இதுவரை கிடைக்கப் பெற்ற முடிவுகளின் படி இப்பாடசாலையில் 41 மாணவர்கள் சித்தியடைந்துள்ளார்கள் என்பதையும் உத்தேசமாக கூறப்படுகிறது

முதன்மை பெற்ற மாணவரின் சுட்டென்:  6936580 

பிள்ளை நேயப்பாடசாலை தொடர்பான சிறப்புகள் முன்வைப்பு நிகழ்வு

(ஏ.எம். தாஹாநழீம்)
கிழக்கு மாகாணத்தில் உள்ள பிள்ளை நேயப் பாடசாலைக்கிடையிருந்து சிறந்த பாடசாலையாக வலயத்தில் இரண்டு பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டு, அப்பாடசாலைகளுக்கிடையிலான முன்வைப்பு நிகழ்வு 14.09.2013 ஆந் திகதியன்று திருகோணமலை சென்மேரிஸ் பெண்கள் கல்லூரியில் நடைபெற்றது.

சம்மாந்துறை கல்வி வலயம் சார்பாக சம்மாந்துறை முஸ்லிம் மகளிர் வித்தியாலயம் இந் முன்வைப்பில் கலந்து கொண்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இப்பாடசாலை சார்பாக  அதன் அதிபர் ரீ.எம். தௌபீக்,பிரதி அதிபர் ஏ.எம்.தாஹாநழீம்,ஆசிரியர்களான எம்.எம். விஜிலி, எம்.எஸ். சிறாஜடீன் இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாணக்கல்விப் பணிப்பாளர் எம்.ரீ. நிஸாம், மற்றும்  ஆரம்பப்பிரிவு உதவிக்கல்விப் பணிப்பாளர் பீ. உதயகுமார் கலந்து கொண்டனர்.





சமூக விஞ்ஞான வினாடிப் போட்டியில் முதலிடம் வென்றார் பாத்திமா இஸ்றா.

பாடசாலை மாணவர்களின் சமூகக்கல்வி அறிவை விருத்தி செய்யும் நோக்குடன் பாடசாலை மாணவர்களுக்கிடையில் ஒவ்வொரு வருடமும் நடைபெற்றுவருகின்றது அப்போட்டிகளில்  திறமை காட்டும் மாணவர்களை வலய, மாகாண மட்ட போட்டிகளில் வெற்றி பெரும் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படுகின்றது. 


இதன் அடிப்படையில் கடந்த 22.06.2013 ஆந் திகதியன்று மருதமுனை அல்-மனார் மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற மாகாண மட்ட தரம் -8 ற்கான சமூக விஞ்ஞான வினாடிப் போட்டியில் போட்டிப் பிரிவில் முதலாம் இடத்தை தட்டிக்கொண்டார் சம்மாந்துறை முஸ்லிம் மகளிர் வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவி எம்.எஸ். பாத்திமா இஸ்றா. இப்போட்டியில் வெற்றி பெறுவதற்கு  பாடசாலை அதிபர் ரீ.எம். தௌபீக் மற்றும் அப்பாட ஆசிரியையான எம்.ரீ. றணீஸா ஆகியோரின் வழிகாட்டலின் ஊடாக இந்தப் பெருமையை பாடசாலைக்குத் தேடித்தந்துள்ளார்.



இவரை  பாடசாலைச் சமூகமும்,  பொது நலன் விரும்பிகள் மற்றும் எமது இணையத்தளம் சார்பாக நாங்களும் பாராட்டுகின்றோம்.

அகில இலங்கை தமிழ்மொழித்தின வாசிப்பு போட்டியில் அப்றாஸ் முதலாமிடம்

முஸ்லிம் மகளிர் வித்தியாலயத்தைச் சேர்ந்த தரம் 5 ல் கல்வி பயிலும் தாஹிர் முகம்மட் அப்றாஸ் 06.07.2013ஆந்த திகதி கொழும்பு றோயல் கல்லாரியில் நடைபெற்ற அகில இலங்கை தமிழ்மொழித்தின பிரிவு -1 ற்கான வாசிப்பு போட்டியில் முதலாமிடத்தை தட்டிக் கொண்டு தங்கம் வென்றார். 

எம்.ஏ.ஜாபிரா (ஆசிரியை)யின் மகனான இவரை பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்கள்,சம்மாந்துறை வலயமும் பாடசாலைச் சமூகமும் பாராட்டுகின்றார்கள்.

ஊட்டற் பிரதேசம் தொடர்பான கருத்தரங்கு.


 (ஏ.எம். தாஹாநழீம்)
எல்லாச் சிறுவர்களுக்கு கல்வி வழங்கும் நோக்குடன் அரசினால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுக்கொண்டிருக்கின்றன. அதற்காக தேசிய மற்றும் சர்வதேச நிறுவனங்களும் ஒத்துழைப்பு வழங்கிக்கொண்டிருக்கின்றன.

இந்த வகையில் யுனிசெப் நிறுவனத்தின் உதவியுடன் பிள்ளை நேயப் பாடசாலைகளுக்கான ஊட்டற் பிரதேசத்தை எவ்வாறு வரையறை செய்வது மாணவர்களை எவ்வாறு அடையாளப்படுத்துவது தொடர்பாக ஆசிரியர்களுக்கான  கருத்தரங்கு சம்மாந்துறை முஸ்லிம் மகளிர் வித்தியாலயத்தின்  பாடசாலயின்  கணனி வள நிலையத்தில்(28.06.2013) பாடசாலையின் பிரதி அதிபர் ஏ.எம். தாஹா நழீம் அவர்களி்ன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வினை உதவிப் கல்விப் பணிப்பாளர் Mr.M.A.A.Rasool Pefor.ADE Non-formal   அவர்களுகம் வளவாளராக Mr.M.S.LAHIR ISA Special Education  அவர்களும்  கலந்து சிறந்த முறையில் ஊட்டற் பிரதேசம் தொடர்பான விடயங்களை ஆசிரியர்களுக்கு தெளிவுபடுத்தினார்கள்.

புதிய மாணவர்கள் அனுமதி - 2013

சம்மாந்துறை முஸ்லிம் மகளிர் வித்தியாலயத்தில் தரம்-1 யில் 2013 ஆண்டிற்கு புதிய மாணவர்களை சேர்த்து கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது.

விண்ணப்ப படிவங்களை முஸ்லிம் மகளிர் வித்தியாலயத்தில் நீங்கள்
(22-11-12) திகதி முதல் பெற்று கொள்ள முடியும்.


சம்மாந்துறை முஸ்லிம் மகளிர் வித்தியாலய மாணவி ஹன்ஸா விஞ்ஞான வினாடி வினாப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார்.


(ஏ.எம். தாஹா நழீம்)
செல்வி, MR. ஹன்ஸா, மாகாண மட்ட விஞ்ஞான வினாடி வினாப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார்.

கிழக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலைகளுக்கிடையிலான விஞ்ஞான வினாடி வினாப் போட்டியில் சம்மாந்துறை முஸ்லிம் மகளிர் வித்தியாலயத்தைச் சேர்ந்த தரம் – 9 ல் கல்வி கற்கும் மாணவி செல்வி MR. ஹன்ஸா மாகாண மட்டப் போட்டியில் தங்கப் பதக்கத்தை பெற்றுக்கொண்டார்.

இந்த வெற்றிக்காக இப்பாடசாலையில் விஞ்ஞான ஆசிரியையாக கடமையாற்றும் ஆசிரியை Mrs. KA. நஸீர் அவர்களும் இப் பாடசாலையின் அதிபர் TM. தௌபீக் அவர்களும் இம் மாணவியை வழிப்படுத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும். அத்துடன், இம் மாணவி இதற்கு முன்னரும் பல பரிசில்களை மாகாண, மாவட்ட, வலய மட்டத்தில் பெற்று பாடசாலைக்கு பெருமை தேடித்தந்துள்ளார்.
மேலும், இம்மாணவி இப்பாடசாலையின் மாணவத்தலைவி என்பதையும் இங்கு சுட்டிக்காட்டுதல் வேண்டும்.


இவரை எமது பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், பெற்றார், பாடசாலை சமூகமும் இவரை வாழ்த்துக்கின்றனர்.

உலக கைகழுவுதல் தின நிகழ்வு






(ஏ.எம்தாஹா நழீம்)
நாளுக்கு நாள் மனித தேவைகள் அதிகரிக்கும் போது அவனது சிந்தனைகளும் தேவைக்கேற்றாற் போல் சிந்தித்துக் கொண்டு தான் இருக்கும். இன்று பல்வேறு நோக்கங்களுக்கு சர்வதேச நிறுவனங்கள் பல நாட்களை முக்கியப்படுத்தும் நோக்கோடு அவைகளை சர்வதேச தினங்களாக மாற்றி அதன் தேவை மக்கள் மத்தியில் புரிய வைக்க கையாளும் ஒரு யுக்தி தான் இந்த சர்வதேச தினங்களாகும்.

அந்த வகையில் இன்று 15.10.2012 ஆந் திகதியன்று உலக கைகழுவுதல் தினமாகும். அதனை சிறப்பாகவும், மாணவர்களுக்கு பயனளிக்கும் வகையிலும் கொண்டாடுமுகமாகவும். ஐக்கிய நாடுகளின் யுனிசேப் நிறுவனம் ஒவ்வொரு வருடமும் பாடசாலை மட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக கொண்டாடி வருகின்றது என நான் சொன்னால் அது மிகையாகாது.

இந்த வகையில் சம்மாந்துறை முஸ்லிம் மகளிர் வித், தங்களுடைய மாணவ சமூதாயத்திற்கு இந்த தினத்தை நினைவு கூறும் நிகழ்வும் வித்தியாலய முன்றலில் நடைபெற்றது. அதில் பிரதம அதிதியாக அப்பகுதிக்குப் பொறுப்பான சுகாதார பரீசோதகர் ஏ.எம். றம்ஸான் கலந்து கொண்டதோடு அந் நிகழ்வு பாடசாலையின் அதிபர் ரீ.எம். தௌபீக் அவர்கள் தலைமை வகித்தார்கள்.

இந்த நிகழ்வை இப்பாடசாலை சுகாதாரக்கழகம் ஏற்பாடு செய்தது இதற்கு வழிகாட்டியாக இப்பாடசாலையில் கற்பிக்கும் உடற்கல்வி ஆசிரியை திருமதி வை. அமிர்தசங்கர் ஒத்துழைப்பு வழங்கியதோடு, இ்ந்நிகழ்வு சிறப்பாக நடைபெற இப்பாடசாலையின் செயற்பாடுகளில் பங்கு வகிக்கும் ஏ.எம். தாஹாநழீம் ஆசிரியர் அவர்களின் மேற்பார்வையின் கீழ் ஒழுங்குபடுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் மாணவர்கள் எவ்வாறு கை கழுவ வேண்டும் என்ற அறிவுறுத்தல் பிரதேச சுகாதாரப் பரிசோதகர் அவர்களால் சிறப்பாக செய்து காட்டப்பட்டதோடு மாணவர்களும் அதில் கலந்து சிறந்த பயிற்சியினைப் பெற்றுக் கொண்டார்கள் என இங்கு குறிப்பிட வேண்டும்.

வினோதம்

Comments

அறிவியல்

தொழில்நுட்பம்

 

© Copyright Sammanthurai News 2015| Design by | Published by www.sammanthurai.net | .