(ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ்)
ஐக்கிய தேசியக் கட்சியின் நிந்தவூர்ப் பிரதேச அமைப்பாளர்
எம்.எம்.றிபாக் தலைமையில் நிந்தவூர் பிரதான வீதியில் அமைந்துள்ள ஐக்கிய தேசியக் கட்சிக் காரியாலயத்திற்கு அருகில் இடம் பெற்ற இந்நிகழ்வில் நீர்ப்பாசனப் பிரதியமைச்சர் திருமதி.அனோமா
கமகே, கிழக்கு மாகாண சபை உறுப்பினரும்,
ஐ.தே.கட்சி தேசிய அமைப்பாளருமான
தயா கமகே ஆகியோர் அதிதிகளாகக் கலந்து கொண்டு, மக்களுக்கு நன்றி தெரிவித்தனர்.
நிகழ்வின் ஐ.தே.கட்சியின் நிந்தவூர்ப் பிரதேச அமைப்பாளர் றிபாக்கினால் பிரதியமைச்சர் அனோமா கமகே,
தயாகமகே ஆகியோர் பொன்னாடை
போற்றி நினைவுச் சின்னங்கள்
வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், ஐ.தே.கட்சி தேசிய அமைப்பாளருமான தயா கமகே இங்கு
உரையாற்றுகையில் “நான் நிந்தவூர்ப்
பிரதேசத்தில் இடம் தேடியபோது எனக்கு யாரும் இடம் வழங்கக் கூடாது என மு.கா. தலைவர் றவூப்
ஹக்கீம் கூறியிருந்தார். என்றாலும் இந்த றிபாக் எனக்கு இடந் தந்ததால், நானின்று இந்த ஆடைத் தொழிற்சாலையை நிறுவியிருக்கிறேன்.
இதில் சிங்களவர் யாருமில்லை. முழுவதும் முஸ்லிம் சகோதரர்களே
வேலை செய்கின்றனர். இது போல் கிழக்கு மாகாண சபையில் சிங்களவரான எனக்கு முதலமைச்சர்
பதவியைத் தர மறுத்து விட்டார். ஏன் நான் முஸ்லிம் மக்களுக்குச் சேவை செய்ய மாட்டேனா?
பேருவலை, தர்காடவுன் முஸ்லிம்கள் தாக்கப்பட்டபோது றவூப் ஹக்கீம்
குரல் கொடுக்கமுதல் நமது பிரதமர் றனில் விக்கிரமசிங்கவே முஸ்லிம்களுக்காகக் குரல் கொடுத்தார்.
எனவே இலங்கை வாழ் மக்களாகிய நாமெல்லோரும் மயித்திரி யுகத்தில் இணைந்து ஒற்றுமையுடன்
செயற்படுவோம்” எனத் தெரிவித்தார்.