News Update :

Follow on twitter

Follow on twitter

ads

ads
<>தற்போது கிடைத்த செய்திகள்>>

sponsored:

sponsored:
Government Job Vacancies, Free Application Form, Private Job Free Application, Courses & Examination

FollowNewsstr SEND 40404

உங்கள் செய்திகளையும் எமக்கெனுப்ப : info@sammanthurai.net

Follow US

Follow US

ads

ads

எமது செய்திகளை கைத்தொலைபேசி மூலம் பெற

Moto GP News

விளையாட்டு

Showing posts with label விளையாட்டு. Show all posts
Showing posts with label விளையாட்டு. Show all posts

சயீட் அஜ்மல் மீண்டும் பாகிஸ்தான் அணியில்

லாஹூர்: பாகிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர் சயீட் அஜ்மலின் பந்துவீச்சு முறையானது என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (.சி.சி.) தெரிவித்ததையடுத்து, அவர் சர்வதேச கிரிக்கெட்டுக்கு திரும்பினார். பங்களாதேஷ் சுற்றுப் பயணத்துக்கான பாகிஸ்தான் அணியில் அவர் இடம்பெற்றுள்ளார்.


இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியின்போது அஜ்மல் பந்துவீச்சில் சந்தேகம் எழுந்ததை அடுத்து, அவர் இடை நீக்கம் செய்யப்பட்டார். அவர் தனது பந்துவீச்சைத் திருத்தியதை அடுத்து, உலகக் கிண்ண தொடர் ஆரம்பமாவதற்கு முன்னதாக அவர் மீதான தடை நீக்கப்பட்டது. இதையடுத்து, சயீட் அஜ்மலை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை மீண்டும் அணியில் சேர்த்துள்ளது.

 விரைவில் பங்களாதேஷ் செல்லவுள்ள பாகிஸ்தான் அணி, மூன்று ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் தொடர், இரண்டு டெஸ்ட் போட்டி, ஒரு இருபது-20 ஆட்டத்தில் பங்கேற்கவுள்ளது. இந்த மூன்று தரப்பிலான ஆட்டத்திலும் சயீட் அஜ்மல் பங்கேற்கவுள்ளார். அதேபோன்று முறையற்ற பந்துவீச்சு விவகாரத்தில் இடைநீக்கம் செய்யப்பட்ட சகலதுறை வீரர் முகமது ஹபீஸ் பெயரும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளது. ஆனால், அவர் ஏப்ரல் 9ஆம் திகதி சென்னையில் தனது பந்துவீச்சைத் திருத்த இருப்பது குறிப்பிடத்தக்கது. அதேநேரத்தில் உமர் அக்மல், நஸீர் ஜம்ஸாட் மற்றும் அகமட் செசாட் ஆகியோர் இருபது-20 அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

5 ஆவது தடவையாக சம்பியனானது அவுஸ்திரேலியா!



உலகக்கிண்ணத்தை 5ஆவது தடவையாக தனதாகிக்கொண்டது அவஸ்திரேலிய அணி. 

நேற்று 29.03.2015 மெல்பன் கிரிக்கெற் மைதானத்தில் பார்வையாளர்களுக்கு பாரிய எதிர்பார்ப்புடன் இந்த ஆண்டின் உலகிண்ண இறுதிப் போட்டி நடந்து முடிந்திருக்கின்றது.









இறுதிப்போட்டியில் தகுதிபெற்ற நியூஸீலாந்து அணி எதிர்நீச்சலுக்கு மத்தியில் ரசிகர்களை ஆரவாரப்படித்திருக்கின்றது. எனினும் எதிர்பாராத அளவு அவுஸ்திரேலிய அணியின் மிகைக்கூர்மை கொண்ட பந்துவீச்சுக்கு இறுதியில் முகம்கொடுத்தமை கடுமையாக இருந்தது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சாம்பியன் அணி மூன்று விக்கட்களை மாத்திரம் இழந்து வெற்றியை தன்பக்கம் அடைந்து கொண்டது.



உலகக்கிண்ணம் 2015 – ஒரு பார்வை; முன்னிலையில் இருக்கும் சங்கக்கார

கடந்த பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டியுடன் இம்முறை உலகக்கிண்ண போட்டிகள் ஆரம்பித்தன.


ஆரம்பம் முதலே விறுவறுப்பாக நடைபெற்ற போட்டிகளில் பல்வேறு சாதனைகள்  படைக்கப்பட்டன.

அவை தொடர்பிலான பார்வை தோ,

அதிகூடிய மொத்த ஓட்டங்களைப் பெற்றவர்கள்:
சங்கக்கார – 496 ஓட்டங்கள்
பிரண்டன் டெய்லர் (ஸிம்பாப்வே) – 433 ஓட்டங்கள்
டி வில்லியர்ஸ் – 417 ஓட்டங்கள்
டில்சான் – 395 ஓட்டங்கள்
மஹ்மதுல்லா – 344 ஓட்டங்கள்
அதிகூடிய தனிப்பட்ட ஓட்ட எண்ணிக்கை :
கிறிஸ் கெய்ல் – 215 ஓட்டங்கள்
வோர்னர் – 178 ஓட்டங்கள்
டி வில்லியர்ஸ் – 162 ஓட்டங்கள்(.)
டில்சான் – 161 ஓட்டங்கள்(.)
அம்லா – 159 ஓட்டங்கள்
அதிகூடிய விக்கெட்டுக்களை கைப்பற்றிய வீரர்கள் :
மிச்சல் ஸ்டார்க் – 16 விக்கெட்டுக்கள்
போல்ட் – 15 விக்கெட்டுக்கள்
முகம்மது சமி – 15 விக்கெட்டுக்கள்
டேவி (ஸ்கொட்லாந்து) – 15 விக்கெட்டுக்கள்
டெய்லர் – 14 விக்கெட்டுக்கள்
அணிகளின் அதிகூடி ஓட்ட எண்ணிக்கை :
அவுஸ்திரேலியா – 417/6 எதிர் ஆப்கானிஸ்தான்
தென்னாபிரிக்கா – 411/4 எதிர் அயர்லாந்து
தென்னாபிரிக்கா – 408/5 எதிர் மேற்கிந்தியத்தீவுகள்
அவுஸ்திரேலியா – 376/9 எதிர் இலங்கை
மேற்கிந்தியத்தீவுகள் – 372/2 எதிர் ஸிம்பாப்வே
அதிகூடி பவுண்டரிகளைப் பெற்ற வீரர்சங்கக்கார (54)
அதிகூடி 6 ஓட்டங்களைப் பெற்ற வீரர்டி வில்லியர்ஸ்(20)
அதிகூடிய சதங்களைப் பெற்ற வீரர்சங்கக்கார (4)
உலகக்கிண்ண வரலாற்றில் தொடர்ச்சியாக 3 சதங்களைப் பெற்றவர் என்ற சாதனையை சங்கக்கார படைத்தார்.
ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ச்சியாக 4 சதங்களைப் பெற்றவர் என்ற சாதனையையும் சங்கக்கார தன் வசப்படுத்தினார்.
உலகக்கிண்ண வரலாற்றில் ஒரு அணி பெற்ற அதி கூடிய ஓட்ட எண்ணிக்கையை பெற்ற அணி எனும் சாதனையை அவுஸ்திரேலிய அணி 417 ஓட்டங்களைப் பெற்றுப் படைத்தது. இதற்கு முன்னர் இந்த சாதனை இந்தியா வசமே காணப்பட்டது.
உலகக்கிண்ண வரலாற்றில் ஒரு உலகக் கிண்ணத்தில் அதிகூடிய சதங்களைப் பெற்றவர் என்ற சாதனையை சங்கக்கார தன் வசப்படுத்தினார்.
ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 500 ஆட்டமிழப்புக்களை செய்த முதல் வீரர் என்பதுடன், உலகக்கிண்ணத்தில் அதிக ஆட்டமிழப்புக்களை செய்திருந்த (52) அடம் கில்க்ரிஸ்ட்டின் சாதனையையும் தாண்டினார் சங்கக்கார.
அவுஸ்திரேலிய மண்ணில் ஒருநாள் கிரிக்கெட்டில் சங்கக்காரா 2038 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.வெளிநாட்டு வீரர் ஒருவர்அவுஸ்திரேலியாவில்பெற்ற மூன்றாவது அதிகூடிய ஓட்டங்கள் இவையாகும்.
அத்துடன் அவுஸ்திரேலியாவில் 5 சதங்களைப் பெற்றுள்ள ஒரே ஒரு வௌிநாட்டு வீரர் சங்கக்கார.
இலங்கை அணி சார்பான இரண்டாம் விக்கெட்டுக்கான இணைப்பாட்ட சாதனை புதுப்பிக்கப்பட்டது.

வினோதம்

Comments

அறிவியல்

தொழில்நுட்பம்

 

© Copyright Sammanthurai News 2015| Design by | Published by www.sammanthurai.net | .