News Update :

Follow on twitter

Follow on twitter

ads

ads
<>தற்போது கிடைத்த செய்திகள்>>

sponsored:

sponsored:
Government Job Vacancies, Free Application Form, Private Job Free Application, Courses & Examination

FollowNewsstr SEND 40404

உங்கள் செய்திகளையும் எமக்கெனுப்ப : info@sammanthurai.net

எமது செய்திகளை கைத்தொலைபேசி மூலம் பெற

Moto GP News

விளையாட்டு

Showing posts with label தொழில்நுட்பம். Show all posts
Showing posts with label தொழில்நுட்பம். Show all posts

அறுவைச் சிகிச்சை மேற்­கொள்ளும் இயந்­தி­ரத்­தொ­கு­தியை அமைக்கும் புதிய முயற்சி

மனி­தனின் பணி­களில் இயந்­தி­ரங்­களின் வகி­பாகம் படிப்­­டி­யாக அதி­­ரித்து வரு­கின்­றது. உற்­பத்தித் தொழிற்­சா­லை­களில் தொழி­லா­ளர்­களின் எண்­ணிக்கை குறை­­டைந்து, தன்­னி­யக்க இயந்­தி­ரங்­களை அதி­­மாகப் பயன்­­டுத்தும் முறைமை தற்­போது அப­ரி­மி­­மாகப் பெருகி வரு­கின்­றது.




மீண்டும் மீண்டும் ஒரே வேலை­யினைச் செய்­வது மனி­­ருக்கு சோர்­வினைத் தரும் விட­­மாக அமையும். ஆனால், அவ்­­கை­யான வேலை­யினை எவ்­வித களைப்பும் இன்றி இராப்­­­லாக செய்­­தற்கு இயந்­தி­ரங்­களால் முடியும். இயந்­தி­ரங்­களால் செய்­யப்­படும் வேலைகள் அநே­­மான தரு­ணங்­களில் நேர்த்­தி­யாக அமைந்து பய­னா­ளர்­களை வெகு­வாகக் கவர்ந்து விடு­கின்­றன.

இதற்கு அப்பால், எதிர்ப்­படும் நிலை­மை­­ளுக்­கேற்ப செயற்­­டத்­தக்­­தான, நுட்­­மான செயற்கை நுண்­­றி­வினை உள்­­டக்­கிய தன்­னி­யக்­கத்­தொ­கு­தி­களும் தற்­போது அறி­வியல் ஆய்­வு­களால் உரு­வாக்­கப்­­டு­கின்­றன. ஐம்­பு­லன்­களால் கிடைக்­கப்­பெறும் தூண்­டல்­­ளுக்கு ஒத்த துலங்­கல்கள் மனித மூளையால் ஒருங்­கி­ணைக்­கப்­­டு­வது போன்ற கட்­­மைப்­புக்கள் தன்­னி­யக்­கத்­தொ­கு­தி­­ளிலும் வர ஆரம்­பித்­து­விட்­டன. சிறப்­பான உண­ரிகள், துல்­லி­­மான செயற்­பா­டு­களை உரு­வாக்கும் இயந்­தி­ரத்­தொ­கு­திகள், இவை இரண்­டி­னையும் ஒருங்­கி­ணைக்கும் செயற்கை நுண்­­றிவு என்­­வை­களை உள்­­டக்­கிய தன்­னி­யக்­கத்­தொ­கு­தி­களை சிக்­­லான செயற்­பா­டு­களில் ஈடு­­டுத்தும் முயற்­சிகள் பல ஆய்­­கங்­களில் முன்­னெ­டுக்­கப்­­டு­கின்­றன.

இணை­யத்­­ளத்தில் ஆதிக்கம் செலுத்­து­வது மட்­டு­மல்­லாமல், செலுத்­துநர் தேவை­யற்ற வாகனம், ‘கூகுள்கண்­ணாடி படைப்பு, பறக்கும் மித­வைகள் ஊடான இணைய இணைப்பு போன்ற பல அறி­வியல் புரட்­சி­களை கூகுள் நிறு­வனம் படைத்து வரு­வது நாம் அறிந்­ததே. இந்­நி­று­­னத்தின் ஆய்­விற்கு பொறுப்­பானகூகுள் எக்ஸ்ஆய்­வகம், மருத்­துவ உப­­­ணங்­களை உற்­பத்தி செய்யும்ஜோன்சன் அன்ட் ஜோன்சன்நிறு­­னத்தின் Ethikon என்ற கிளை­நி­று­­னத்­துடன் இணைந்து புதிய வியக்­கத்­தக்க முயற்­சிக்குத் தயா­ராகும் செய்தி கடந்த மார்ச் மாதம் 27 ஆந் திகதி வெளி­யா­கி­யது. இந்த முயற்­சியில் அறுவைச் சிகிச்­சைக்குத் துணை­பு­ரியும் இயந்­தி­ரத்­தொ­குதி ஒன்­றினை படைப்­­தற்குத் திட்­­மி­டப்­பட்­டுள்­ளது.
ஆய்­வு­களை மேற்­கொள்ளும்கூகுள் எக்ஸ்ஆய்­­கத்தின் வாழ்க்கை அறி­வியல் பிரிவு, உயிர் வாழ்க்­கையில் எதிர்ப்­படும் இடர்­களைக் களை­­தற்­கான முயற்­சியில் ஏலவே ஈடு­பட்டு வரு­கின்­றது. குரு­தியில் பய­ணித்து புற்­றுநோய் மற்றும் மார­டைப்பு என்­­­வற்­றினை முன்­­தாகக் கண்­­றியும் நுண்­து­ணிக்­கைகள் உரு­வாக்கும் முயற்­சியில் இந்த ஆய்­வகம் ஈடு­பட்­டுள்­ளது. இது மட்­டு­மல்­லாமல், உடலின் நீரி­ழிவின் அறி­கு­றி­களை கண்­கா­ணிக்கும் உணரி கொண்­­மைந்த கண் ஒட்­டு­வில்லை இந்த ஆய்­­கத்­தினால் வடி­­மைக்­கப்­பட்டு பயன்­படும் நிலையை அண்­மித்­துள்­ளது. இந்­நி­லையில், ‘கூகுள் எக்ஸ்ஆய்­­கத்தின் புதிய கூட்டு முயற்சி அறுவைச் சிகிச்­சையில் புதிய பரி­ணாம மாற்­றத்­தினை உண்­டு­பண்ணும் என எதிர்­பார்க்­கப்­­டு­கின்­றது.

மனி­தரில் மேற்­கொள்­ளப்­படும் அறுவைச் சிகிச்­சைகள் துல்­லி­­மா­கவும், அதே­வேளை எதிர்ப்­படும் நிலை­மை­களை புத்­தி­சா­தூ­ரி­யத்­துடன் எதிர்­கொண்டு மேற்­கொள்­ளப்­­­ வேண்­டி­­வை­யாகும். எனவே, தன்­னி­யக்க இயந்­தி­ரங்கள் தனியே அறுவைச் சிகிச்­சையை மேற்­கொண்­டு­விட முடி­யாது. ஆனால், மருத்­து­வர்கள் அறு­வைச்­சி­கிச்­சை­யினை மேற்­கொள்­ளு­கையில், அவ­சி­­மான இடத்தில் துல்­லி­­மாக செயற்­­டா­­வி­டத்து தேவை­யற்ற காயங்கள், இரத்­தப்­பெ­ருக்கு என்­பவை ஏற்­­டு­­தற்கு வாய்ப்­புக்கள் அதிகம். எனவே, இச்­சி­கிச்­சையில் அறுவைச் சிகிச்சை இயந்­தி­ரத்­தொ­கு­தியை பயன்­­டுத்தி மேற்­கு­றிப்­பிட்ட விரும்­பத்­­கா­­வை­களை நீக்க இந்­நி­று­­னங்­களின் இணைந்த முயற்சி கைகொ­டுக்கும் என நம்­பப்­­டு­கின்­றது. அதா­வது, அறி­வியல் ஆய்­வு­களால் கட்­­மைக்­கப்­படும் அறுவைச் சிகிச்சை இயந்­தி­ரத்­தொ­குதி துல்­லி­­மாக செயற்­படும் வகையில் அமையும். எனவே, அறுவைச் சிகிச்­சை­யா­னது குறைந்த காயங்­களை மாத்­திரம் ஏற்­­டுத்தி மேற்­கொள்ள முடியும். இது அறுவைச் சிகிச்­சையின் பின்­­ரான நோயாளி விரை­வாக குண­­டை­­தற்­கான சாத்­தி­யத்­தினை ஏற்­­டுத்தும் என மருத்­துவத் துறைசார் நிபு­ணர்கள் கருத்துத் தெரி­விக்­கின்­றனர்.


அறுவைச் சிகிச்சை இயந்­தி­ரத்­தொ­கு­தியில் முன்­னேற்­­­­மான ஒளிப்­­­மாக்கும் வச­திகள், உயர் உணர்­திறன் கொண்ட உண­ரிகள் என்­­வை­களை உரு­வாக்கி உள்­­டக்க ஆய்­வா­ளர்கள் எண்­ணி­யுள்­ளனர். இவை­களின் செயற்­பா­டுகள், குருதிக் குழாய்கள், நரம்­புகள், அதீத வளர்ச்­சிக்­­லங்­களின் எல்­லைகள் என்­­வற்­றினை மிகத்­துல்­லி­­மாக அடை­யா­ளப்­­டுத்தும். எனவே, தேவை­யற்ற சேதங்­களைக் குறைத்து அறுவைச் சிகிச்­சையை மேற்­கொள்ள உரு­வாக்­கப்­படும் இயந்­தி­ரத்­தொ­குதி உறு­து­ணை­யாக அமையும். இது மருத்­து­வத்­து­றையில் அபா­­மற்ற வெற்­றி­­­மான அறு­வைச்­சி­கிச்சை ஏற்­பட வழி­­குக்கும்.

வியாபாரத்திற்கான Skype மென்பொருளின் Technical Preview

Microsoft நிறுவனம் Office 2016 பக்கேஜின் Preview பதிப்பினை வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ள அதேவேளை skype மென்பொருளின் Technical Preview பதிப்பினையும் வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளது.
Skype Application மூலம் 300 மில்லியன் மக்கள் தமது குடும்பத்தவர்கள் மற்றும் நண்பர்களுடன் உரையாடுகின்றனர்.


தற்போது,சில விசேட அம்சங்களை உள்ளடக்கி வியாபார நிறுவனங்களின் தொடர்பாடலுக்கு ஏற்றவாறு தனியான மென்பொருள் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.


இதன் சோதனைப் பதிப்பாகவே Technical Preview வெளியிடப்படவுள்ளது.

இன்றைய தொழில் நுட்பத்தால் சோம்பேறித்தனமாகும் குழந்தைகளை தடுக்க 5 வழிகள்


இன்றைய நவீன காலத்தில் குழந்தைகள் புத்திசாலியாக இருக்கிறார்கள், அதே சமயம் மிகவும் சோம்பேறியாகவும் இருக்கின்றனர்.

இதற்கு முக்கிய காரணம், தொழில்நுட்ப முன்னேற்றங்கள் தான். ஏனெனில் இன்றைய குழந்தைகளுக்கு வெளியே சென்று ஓடியாடி விளையாடுவதை விட, ஒரே இடத்தில் உட்கார்ந்தவாறு வீடியோ கேம்ஸ் விளையாடுவது பிடிப்பதால், அவர்கள் வேலை எதாவது செய்ய வேண்டுமெனில் கஷ்டப்படுகின்றனர்.

மேலும் ஆய்வு ஒன்றிலும், இன்றைய காலத்தில் குழந்தைகள் சோம்பேறித்தனமாக இருப்பதற்கு தொழில்நுட்ப முன்னேற்றங்கள் தான் காரணம் என்று சொல்கிறது.

இதனால் குழந்தைகள் சிறு வயதிலேயே பல்வேறு உடல்நல பிரச்சனைகளுக்கு உள்ளாகின்றனர். மேலும் படிக்க வேண்டும் என்றாலே பல குழந்தைகள் வெறுப்படைகின்றனர்.

எனவே, பெற்றோர்கள் குழந்தைகளுடன் நல்ல முறையில் பேசி, நல்ல நண்பனாக பழகி, ஒன்வொன்றின் முக்கியத்துவத்தை சொல்லிப் புரிய வைக்க வேண்டும்.

குழந்தைகள் சோம்பேறித்தனமாக இல்லாமல் இருக்க:

1. சோம்பேறியாக இருக்கும் குழந்தைகளின் பெற்றோர்கள் செய்ய வேண்டியவைகளில் முதன்மையானது, குழந்தைகளுடன் நேரத்தை செலவழிப்பதோடு, அவர்களிடம் பேச வேண்டும்.

மேலும், இத்தகைய குழந்தைகளைக் கையாளும் போது பெற்றோர்கள் எப்போதுமே மிகவும் பொறுமையாக இருக்க வேண்டும்.

ஏனெனில், நீங்கள் சொன்னதும் அவர்கள் உடனே மாற்றிக் கொள்ள முடியாது. அதற்கு சில நாட்கள் ஆகும். குழந்தைகளிடம் பேசும் போது, சுறுசுறுப்பாக இருக்க வேண்டியதன் முக்கியத்துவத்



அவசியம் சொல்ல வேண்டும்.

2. குழந்தைகள் சோம்பேறிதனமாக இருக்கும் போது, அவர்களிடம் சிறுசிறு வேலைகளைச் சொல்லி அவர்களை செய்ய வைக்க வேண்டும்.

ஒருவேளை அவர்கள் செய்ய மறுத்தால், வேலை செய்தால் நீ கேட்பதை வாங்கித் தருவேன் என்று சொல்லியாவது வேலையைச் செய்ய வைக்க வேண்டாம்.

3. சோம்பேறிதனமாக இருக்கும் குழந்தையை கையாளும் போது, சற்று அவர்கள் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் இத்தகைய குழந்தைகள் எப்போதும் சோம்பேறித்தனமாக இருப்பதால், அவர்கள் உடல்நிலை சரியில்லாவிட்டாலும் கண்டுபிடிக்க முடியாது. ஆகவே அவர்களை கவனமாக பார்த்துக் கொள்வதுடன், சுறுசுறுப்பாக வைத்திருக்க முயற்சி செய்ய வேண்டும்.

4. உங்கள் குழந்தைகக்கு ஏதேனும் விளையாட்டின் மீது விருப்பம் இருந்தால், சற்றும் யோசிக்காமல் அதில் அவர்களை ஈடுபடச் செய்யுங்கள். இதனால் அவர்கள் சுறுசுறுப்பாக இருப்பதுடன், மற்ற குழந்தைகளிடம் நட்புறவு கொண்டு, மற்றவர்களைப் பார்த்து எப்படி இருக்க வேண்டுமென்று கற்றுக் கொள்வார்கள்.

5. சோம்பேறிதனமாக  இருக்கும் குழந்தைகளின் பெற்றோர்களாக இருப்பது சாதாரணம் அல்ல. அப்போது நிறைய பொறுமைத் தேவைப்படும்.

ஏனெனில், நீங்கள் ஏதேனும் சொல்ல அவர்கள் அதை செய்யாமல் இருந்தால், உங்களுக்கு கோபம் வந்து அவர்களை திட்டுவீர்கள்.

அப்படி செய்தால், அவர்கள் கோபமடைவதுடன் உங்களையும் எரிச்சலடைய செய்வார்கள். எனவே அவர்களிடம் பொறுமையாக எடுத்து சொல்லி புரிய வைக்க வேண்டும்.

கீழே உள்ள முகப்புத்தக இணைப்பை லைக் செய்து எங்களையும் உங்கள் உறவாக உங்கள் முகப்புத்தகத்தில் இணைத்தக் கொள்ளுங்கள்.இந்த இணையத்தை மற்றவா்களுக்கும் பகிா்ந்து எமக்கு உற்சாகத்தைத் தாருங்கள்.சமூகத்திற்கு ஒவ்வாத தகவல்களை நாம் தந்தால் அதனை நிச்சயமாக எமக்குச் சுட்டிக் காட்டி எம்மை வழிநடத்துங்கள்.

வினோதம்

Comments

அறிவியல்

தொழில்நுட்பம்

 

© Copyright Sammanthurai News 2015| Design by | Published by www.sammanthurai.net | .