சம்மாந்துறையைச் சேர்ந்த சவுன்ட் இஸ்ஸதீன், ஸ்பீக்கர் இஸ்ஸடீன் என எல்லோராலும் செல்லமாக அழைக்கப்படும்
இஸ்ஸதீன் இன்று 23.02.2017 காலமானார்.
மறைந்த சகோதரர் சம்மாந்துறையில் நான் கண்ட தன்நம்பிக்கையின் சின்னம், தான் வலது குறைந்தவர் என்ற தாழ்வு மனப்பான்மை இன்றி மனம் தாழாது தனது சொந்தக் காலில் யாரிடம் கையேந்தாது உழைத்து வாழ்ந்த உண்மையான மனிதர்.
சம்மாந்துறையில் கலை நிகழ்ச்சிகள் நடந்தாலும் இவரது ஸ்பீக்கர் செட்டுதான் ஒலிக்கும். தொழிலில் சிறப்பு மிக்கவராகவும் பாடல் மற்றும் நடிப்பு கலந்த நகைச்சுவையாளரவாகவே இஸ்ஸடீன் தன்னை அடையாளப்படுத்தியிருந்தார்.
கால்-கைகள் நன்றாக இருக்கும் சிலர் கூட பிறரை நம்பி உண்டு வாழ்கிறார்கள் சகோதரர் இஸ்ஸடீன் இவர்களை விடவும் எவ்வளவோ மேல் தனது சொந்தக் காலில் தனக்கென்று ஒரு தொழிலை ஆரம்பித்து உழைத்து உண்டு வாழ்ந்தவர், நல்ல புத்திசாலி.
அன்னாரின் கப்ர் வாழ்வு, மறுமை வாழ்வுக்காக இறைவனிடம் பிரார்த்திப்போம்.
ஆமீன்.
மக்கள் நண்பன்.