பல்வேறுபட்ட சமூகசேவைப் பணிகளை மேற்கொள்ளும் RFA அமைப்பு “சாதனையாளர்களின் பொதுவான பண்புகள்” எனும் கருத்தரங்கு ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.
மேற்படி கருத்தரங்கின் வளவாளராக, சர்வதேச ரீதியாக தனிநபர் முன்னேற்ற செயலமர்வு பாடநெறியை (Personal Development) நடாத்தி வருகின்ற விரிவுரையாளர் ஸமான் முஸ்தபா (Barrister at Law, LLB, LLM - Buckingham - UK Life Coach, Public speaker and NLP Practitioner) அவர்கள் கலந்து கொள்ள உள்ளார். இக்கருத்தரங்கு, சம்மாந்துறை அப்துல் மஜீத் மண்டபவத்தில் 13.12.2015 பகல் 2pm மணியளவில் நடைபெற உள்ளது. தனியார்துறை ஊழியர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், க.பொ.உயர்தர மாணவர்கள், பாடசாலை கல்வியை முடித்தோர், தொழிலை எதிர்பார்த்து இருப்போருக்காக மேற்படி கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.