( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு 14.11.2015 மாபெரும் விழிப்புணர்வு ஊர்வலமொன்று நிந்தவூரில் இடம் பெற்றது.
நிந்தவூர் ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியேட்சகர் திருமதி. சஹிலா இஸ்ஸதீன் தலைமையில் இடம் பெற்ற இவ்வூர்வலத்தில் சுகாதார பிரதியமைச்சர் எம்.சீ.பைசால் காசீமும் இணைந்து ஒத்துழைப்பு வழங்கினார்.
நிந்தவூர் அல்-அஸ்றக் தேசியக் கல்லூரி மாணவர்களின் ஆதரவுடன் நிந்தவூர் ஆதார வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் ஏற்பாடு செய்த இவ்வூர்வலம் காலை 10 மணியளவில் நிந்தவூர் அல்-அஸ்றக் தேசியக் கல்லூரியிலிருந்து கல்முனை – அக்கரைப்பற்று பிரதான வீதிவழியே பயணித்து, இறுதியில் நிந்தவூர் பிரதேச செயலகத்தில் முடிவுற்றது.