News Update :

Follow on twitter

Follow on twitter

ads

ads
<>தற்போது கிடைத்த செய்திகள்>>

இனவாதத்தின் பரிசு


கடந்த காலங்களில் ஒற்றுமையாக வாழ்ந்த சிங்கள-முஸ்லிம் முஸ்லிம் மக்களிடையே ஞானசார என்னும் திடீர்  புயல் வந்ததால் பல்லின மக்கள் ஒன்றாக பழகும் பொது இடங்கள், அலுவலகங்கள் மற்றும்  பல்கலைகழகம் போன்ற  இடங்களில்  சிங்கள-முஸ்லிம் மக்கள் ஒருவருக்கொருவர் விரோதியை போல் பார்க்க ஆரம்பித்தனர்.

இதெற்கெல்லாம் காரணம், இன துவேசத்தை சிங்களவர்கள் மத்தியில் விதைத்து, ஹலாலை நிறுத்தி அதன் மூலம் தான் சிங்கள மக்களின் கதாநாயகன் என்று வலம் வந்த இந்த ஞானசாரவின்  செயற்பாடுகள் தான். மேலும்  பள்ளிவாசல்கள், வியாபார தலங்கள் என்று அனைத்திலும் பகிரங்கமாகவே முஸ்லிம்களுக்கு எதிராக தனது அராஜகத்தை அரங்கேற்றி வந்தார். இதனைத் தொடர்ந்து, அழுத்கமையில் இனவாத பேச்சால் சிங்களவர்களை தூண்டி கோர தாண்டவமாடி பல கோடி  ரூபா சொத்துகளை எரித்து சில  மனித உயிர்களையும் கொல்ல வழிசமைத்தார் 

இதெற்கெல்லாம் கடந்த அரசாங்கம் எந்த சட்ட நடவடிக்கை எடுக்காமல் அரசு ஆதரவு கொடுத்த காரணத்தால் இன்னும் அகந்தையுடன் மீண்டும் மீண்டும் முஸ்லிம் சமூகத்துக்கு ஹிஜாப், மாடறுப்பு  என்று  நாளாந்தம் இடையூறு கொடுத்தவண்ணமே  இருந்தார். 

நாளடைவில் நான் தான் சிங்கள மக்களின் "உரிமைக் காவலன்"என்று அவரே எண்ணி அவரின் மதிப்பை கூடுதலாக எடைபோட்டு   பொது பல சேனா என்று அமைப்பை ஒரு அரசியல் கட்சியாக பதிவு செய்து பாராளுமன்றத்துக்கு தெரிவாகி இன்னும் தனது அதிகாரத்தை தொடரலாம் என்ற ஒரு நப்பாசையுடன் தேர்தலில் போட்டியிட்டார்.

ஆனால், இந்த பாராளுமன்ற தேர்தலில் சிங்கள சமூகம் இவரின் இனவாத செயற்பாட்டுக்கு தங்கள் அதிருப்தியை வெளிபடுத்தி தேர்தலில் இவரை ஓரம்கட்டி, நீ ஒரு மனநோயாளி சமூகத்தை கூறுபோடுபவன் என்று  நிரூபித்து தகுந்த பாடம் புகட்டியுள்ளனர். 

இது இனவாதம் பேசும் ஒவ்வொருவருக்கும் பாடமாக அமையும் என்றது எந்த வித ஐயமும் இல்லை. "அல்லாஹ் போதுமானவன்"

 
எம்.பி. முஹம்மட் ரிஷாட் 
 (சமாந்துறை)

Share this Article on :

வினோதம்

Comments

 

© Copyright Sammanthurai News 2015| Design by | Published by www.sammanthurai.net | .