வன்னி மாவட்டத்தில் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடுவதன் மூலம் முஸ்லிம்களின் வாக்குகளைச் சிதரடித்து சிங்களவர் ஒருவரை நாடாளுமன்ற உறுப்பினராக்கும் சதித் திட்டத்தைஹுனைஸ் பாரூக் கைவிட்டு இத்தேர்தலில் போட்டியிடுவதில்இருந்து விலகிக்கொள்ள வேண்டும்.
வன்னி மாவட்டம் முசலிப் பிரதேசத்தில் நேற்று முஸ்லிம்காங்கிரசின் வேட்பாளர்களை ஆதரித்து இடம்பெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டங்களில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே இவ்வாறுகூறினார்.அவர் மேலும் கூறுகையில், வன்னி மாவட்டம் 1989 ஆம் ஆண்டில் இருந்து முஸ்லிம்காங்கிரசிற்கு பிரதிநிதிகளைத் தந்து வருகின்றது. இம்முறைத்தேர்தலிலும் அது தொடரும். இந்த முறை மும்முனைப் போட்டி இடம்பெறுகின்றது.முஸ்லிம்காங்கிரஸ் ஒருபுறம்,ரிசாத் பதியுதீன் ஒருபுறம்,ஹுனைஸ் பாரூக்இன்னொரு புறம் என அப்போட்டிகள் இடம்பெறுகின்றன.அந்தப்போட்டியில் வெல்லப்போவது முஸ்லிம் காங்கிரஸ் மட்டும்தான். மஹிந்தவின் செல்லப் பிள்ளையான ரிசாத் மஹிந்தவை பிரதமராக்கும் மறைமுகமான செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளார். மறுபுறம்,வன்னியில் ஹுனைஸ் பாரூக்வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடுவதால் முஸ்லிம்களின்வாக்குகளைப் பிரித்து சிங்களவர் ஒருவரை நாடாளுமன்றுக்குஅனுப்பப்போகிறார்.
இவர் முஸ்லிம்களுக்கு இதன் மூலம் மிகவும் பாவத்தைச் செய்கிறார்.வரலாற்றுத் துரோகத்தை இழைக்கின்றார். இந்தப் பாவச்செயலில் இருந்து அவர் விடுபட வேண்டும். தேர்தல் போட்டியில்இருந்து விலகிக்கொள்ள வேண்டும். முஸ்லிம் காங்கிரசில்போட்டியிட்டால் மாத்திரமே வெற்றிபெற முடியும். அவர் வெற்றிலையில் போட்டியிட எடுத்த முடிவு தவறானது என்று சிலரிடம் கூரிக்கவலைப்பட்டதாக நான் அறிந்தேன். வன்னி மக்களுக்கு முஸ்லிம் காங்கிரஸ் ஆசனத்தைத்தந்துவிட்டது.அதை நீங்கள் வென்று எடுக்க வேண்டும்.அப்போதுதான்எமது எதிரிகளை-சமூக விரோதிகளை தோற்கடிக்க முடியும். முஸ்லிம்களின் அடையாளமாகவுள்ள இந்த முஸ்லிம் காங்கிரஸ்கட்சியை அழிப்பதற்கு வன்னி மக்கள் இடங்கொடுக்கக் கூடாது. -
ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம்களால் தோற்கடிக்கப்பட்டமுஸ்லிம்களின் எதிரிகளுடன் மறைமுகமாக இணைந்து செயற்படும்முஸ்லிம் துரோகிகளை இந்தத் தேர்தலில் தோற்கடித்து வீட்டுக்குஅனுப்ப வேண்டும் என அமைச்சரும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவருமான ரவ்ப் ஹக்கீம் கூறினார்.