சம்மந்துறையில் இயங்கி
வரும் சமூக சேவை அமைப்பான FODE ( Forum
for Development) சம்மந்துறையின் கல்வியில் பாரிய கல்விப்புரட்சியினை உண்டுபண்ணும்
நோக்கத்துடன் ஓர் திட்டத்தினை வழிநடாத்தி
வருகின்றமை எடுகோலாக கொண்டுள்ளது.
![]() |
WWW.SAMMANTHURAI.NET |
கடந்த சாதாரண
தர பரீட்சை முடிவுகள் வெளியான போது அனைத்து இணையத்தளங்களும் பிரசுரித்த செய்தி தேசிய பாடசாலையில்
வரலாறு காணாதளவு 9A க்களும், 8A க்களும் இம்முறை பெறப்பட்டுள்ளன
எனவே சம்மந்துறையின் கல்விமட்டம் பாரிய வளர்ச்சியடைந்துள்ளது என்பதாகும். மிகவும்
மகிழ்ச்சிகரமான ஒரு செய்திதான் ஆனால்
அவர்கள் அதே சம்மாந்துறையில் உள்ள
பல பாடசாலைகளின் அடைவு மட்டத்தினை ஆராய
மறந்துவிட்டார்கள். ஏனென்றால் அவர்களின் கல்விமட்டத்தில் பெரிதும் அக்கரை பலருக்கு இல்லை
என்பதே கசப்பான உண்மையாகும்.
இதனை கவனத்திட்கொண்ட இவ்வமைப்பானது தமக்கான ஓர் திட்டத்தினை வழிவகுத்தது. மாணவர்களின் அடைவுமட்டம் பின்தங்கிய
(ஒப்பீட்டு ரீதியில்) பாடசாலை ஒன்றில் சுமார்
எட்டு தொடக்கம் பத்து வரையான மாத
இடைவெளிக்கு தொடர்ந்து மாணவர்களை நெறிப்படுத்தல், கருத்தரங்கு நடாத்தல் மேலும் வாரம் ஒருமுறை
அடைவுமட்ட பரீட்சை நடாத்தல் என்பதாகும். இதற்காக அவர்கள் செலவிட
முடிவு செய்த தொகை 50000 ரூபாய்
ஆகும். இதனை எமதூரின் பல
புத்திஜீவிகளிடமிருந்தும் தனது சொந்த பணத்திலும்
இருந்து பெற முடிவு செய்துள்ளனர்.
முதற்கட்டமாக சம்மாந்துறை சென்னால்
சாஹிரா கல்லூரியை தேர்வு செய்து கணித பாடத்தை ஆரம்பித்தனர். கடந்த நாட்களில்
இதற்காக பல்வேறு ஆலோசனை கருத்தரங்குகள்
இடம்பெற்று பெற்றோர்களிடம் கருத்துக்களை பெற்றனர்.