News Update :

Follow on twitter

Follow on twitter

ads

ads
<>தற்போது கிடைத்த செய்திகள்>>

தந்தையை காதலுக்காக கொலை செய்த மகன்

மாவனல்ல பிரதேசத்தில் காதலுக்காக தந்தையை மகன் ஒருவர் கொலை செய்துள்ளார். மாவனல்ல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

41 வயதான கே.டி. காமினி ஆனந்த என்ற நபரே சம்பவத்தில் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். 20 வயதான மகன் ஏற்படுத்திக் கொண்ட காதல் தொடர்பு குறித்த தந்தை திட்டியதாகவும் இதன் போது ஏற்பட்ட வாக்குவாதம் இறுதியில் கொலையாக மாறியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் மாவனல்ல பொலிஸ் நிலையத்தில் இன்று மாலை சரணடைந்துள்ளார். நாளைய தினம் காலை சந்தேக நபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Share this Article on :

வினோதம்

Comments

 

© Copyright Sammanthurai News 2015| Design by | Published by www.sammanthurai.net | .