News Update :

Follow on twitter

Follow on twitter

ads

ads
<>தற்போது கிடைத்த செய்திகள்>>

எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவுசெய்யப்பட வேண்டும்.

(அன்சார்)
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவுசெய்யப்பட வேண்டும். இதுவே நாடாளுமன்ற மரபாகும். என சம்மாந்துறை பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவரும்,  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும்,சிரேஷ்ட சட்டத்தரணியுமான எஸ்.எம்.முகம்மட் முஸ்தபா தெரிவித்தார்.
www.sammanthurai.net


அம்பாறை மாவட்ட கரும்புச் செய்கையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் சம்பந்தமாக கலந்துரையாடல் 05/04/2015 சம்மாந்துறை அல்- மர்ஜான் மகளிர் கல்லுாரிக்கு அருகாமையில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு சமகால அரசியல் நிலவரம் சம்பந்தமாக விவசாயிகளுக்கு விளக்கமளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையிலே- நாட்டில் ஆளும்கட்சி மற்றும எதிர்க்கட்சி ஒன்றிணைந்து தேசிய அரசாங்கத்தை அமைத்திருப்பதால் அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சியென இரண்டு தரப்புக்களும் ஒன்றாக இருக்க முடியாது. நாடாளுமன்ற்தில் எதிர்க்கட்சியினை நியமிக்க வேண்டியது அவசியமாகும். அந்த வகையில் நாடாளுமன்ற விதிப்படி தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்றக்குழுத் தலைவர் இரா. சம்பந்தனுக்கே எதிர்க்கட்சி தலைவர் பதவி வழங்க வேண்டும். 
அதுதான் நாடாளுமன்றத்தின் மரபாகும்.
நாடாளுமன்றத்தில் தற்போது 13 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளதோடு, மூன்றாவது பெரும்பான்மை பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனை எதிர்க்கட்சித் தலைவராக நியமிப்பதன் மூலம் சிறுபான்மை தமிழ்மக்கள் மத்தியில் ஒரு நம்பிக்கையையும் ஏற்படுத்த முடியும். என்றார்.

இங்கு கலந்து கொண்ட விவசாயிகள் தங்கள் காணிகளில் தொடர்ந்தும் கரும்புச் செய்கையினை செய்வதன் மூலம் பாரிய நஷ்டங்களை எதிர்கொண்டு வருவதாகவும், இதனால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் தங்களின் காணிகளில் மீண்டும் நெற்செய்கையினை மேற்கொள்ள வேண்டும் அல்லது மாற்று வழிகளை ஏற்படுத்த வேண்டும். என தெரிவிக்கப்பட்டது. இது சம்பந்தமாக சம்பந்தப்பட்ட பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சரை குழுவினர் எதிர்வரும் புதன்கிழமை சந்தித்து அதற்கான தீர்வினை பெற்றுத்தருவதாக சம்மாந்துறை பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் எஸ்.எம்.எம். முஸ்தபா தெரிவித்தர்.
Share this Article on :

வினோதம்

Comments

 

© Copyright Sammanthurai News 2015| Design by | Published by www.sammanthurai.net | .