லாஹூர்:
பாகிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர்
சயீட் அஜ்மலின் பந்துவீச்சு முறையானது என சர்வதேச கிரிக்கெட்
கவுன்சில் (ஐ.சி.சி.)
தெரிவித்ததையடுத்து, அவர் சர்வதேச கிரிக்கெட்டுக்கு
திரும்பினார். பங்களாதேஷ் சுற்றுப் பயணத்துக்கான பாகிஸ்தான் அணியில் அவர் இடம்பெற்றுள்ளார்.
இலங்கைக்கு
எதிரான டெஸ்ட் போட்டியின்போது அஜ்மல்
பந்துவீச்சில் சந்தேகம் எழுந்ததை அடுத்து, அவர் இடை நீக்கம்
செய்யப்பட்டார். அவர் தனது பந்துவீச்சைத்
திருத்தியதை அடுத்து, உலகக் கிண்ண தொடர்
ஆரம்பமாவதற்கு முன்னதாக அவர் மீதான தடை
நீக்கப்பட்டது. இதையடுத்து, சயீட் அஜ்மலை பாகிஸ்தான்
கிரிக்கெட் சபை மீண்டும் அணியில்
சேர்த்துள்ளது.