News Update :

Follow on twitter

Follow on twitter

ads

ads
<>தற்போது கிடைத்த செய்திகள்>>

திக்ரிட்டில் ஐ.எஸ். கோட்டையை நோக்கி ஈராக் படையினர் வேகமாக முன்னேற்றம்

ஈராக் அரச படையினர் மற்றும் 'pயா போராளிகள் திக்ரிட் நகரின் பல முனைகளில் இருந்தும் நகரின் மத்திய பகுதியை நோக்கி முன்னேறி வருவதாக அரச வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன. இஸ்லாமிய தேசம் (.எஸ்.) கட்டுப்பாட்டில் இருக்கும் திக்ரிட் நகரை மீட்கும் பாரிய இராணுவ நடவடிக்கை கடந்த வாரம் ஆரம்பிக்கப்பட்டது.

திக்ரிட் நகரின் வட பகுதியில் இருக்கும் கதையா பகுதியை இராணுவம் மற்றும் ஆயுதப் போராளிகள் கைப்பற்றியதாக மாகாண ஆளுனர் புதனன்று குறிப்பிட்டிருந்தார். மறுபுறம் நகரின் தென் பகுதியில் இருந்து மற்றொரு படைப் பிரிவினர் மத்திய பகுதியை நோக்கி வேகமாக முன்னேறி வருவதாக பாதுகாப்பு தரப்பினர் குறிப்பிட்டுள்ளனர்.

.பி. செய்திச் சேவையால் பெறப்பட்டிருக்கும் வீடியோ ஒன்றில், துருப்பினர் மற்றும் 'pயா போராளிகள் இராணுவ வாகனங்களில் 'pயா கொடிகளுடன் நகருக்குள் செல்வது பதிவாகியுள்ளது. வடக்கு ஈராக்கின் பெரும் நிலப்பகுதியை கைப்பற்றிய .எஸ். போராளிகள் கடந்த {ன் மாதத்தில் திக்ரிட் நகரையும் கைப்பற்றினர். நகரில் சதாம் {ஸைன் காலத்தில் கட்டப்பட்ட மாளிகைகளை .எஸ். போராளிகள் தமது தலைமையகங்களாக பயன்படுத்தி வருகின்றனர்.

திக்ரிட் நகர் மீது 10 தினங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட படை நடவடிக்கைக்கு 20,000க்கும் அதிகமான துருப்பினர் மற்றும் 'pயா போராளிகளுடன்; உள்ளுர் சுன்னி பழங்குடியின ரும் பங்கேற்றுள்ளனர். படையினர் நகரின் கிழக் காக டைக்ரிஸ் நதிக்கரையில் இருந்து நகரத்தை நோக்கிய படை நடவடிக்கையை ஆரம்பித்தனர்.

திக்ரிட் நகரின் வடக்கு முனையில் இருக்கும் அல் அலாம் சிறு நகரை படையினர் கடந்த செவ்வாய்க்கிழமை கைப்பற்றினர். இதன்மூலம் திக்ரிட்டை நோக்கிய தாக்குலுக்கு இராணுவத் திற்கு வாய்ப்பு ஏற்பட்டது. இந்நிலையில் திக்ரிட் நகர இராணுவ மருத்துவமனை புதனன்று .எஸ். இடமிருந்து மீட்கப்பட்டது. அதேபோன்று திக்ரிட்டுக்கு அருகில் இருக்கும் மற்றொரு சிறு நகரான அல் iஜலின் எண்ணெய் வயலையும் அரச படை கைப்பற்றியுள்ளது.


Share this Article on :

வினோதம்

Comments

 

© Copyright Sammanthurai News 2015| Design by | Published by www.sammanthurai.net | .