News Update :

Follow on twitter

Follow on twitter

ads

ads
<>தற்போது கிடைத்த செய்திகள்>>

பெண்களுக்கு ஆபாச குறுந்தகவல்களை அனுப்பியவர் கைது

நாட்டின் பல்வேறு பகுதிகளிலுள்ள பெண்களின் கையடக்கத்
தொலைபேசிகளுக்கு ஆபாச குறுந்தகவல்களை அனுப்பியதாக கூறப்படும் சந்தேகநபர் ஒருவர் கட்டுபொத்த பகுதியில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கட்டுபொத்த தபால் காரியாலயத்தில் சேவையாற்றும் தற்காலிக ஊழியர் ஒருவரே சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிடுகின்றது.

ஆபாச குறுந்தகவல்களை அனுப்புவதற்காக சந்தேகநபரினால் பயன்படுத்தப்பட்ட மூன்று கையடக்கத் தொலைபேசிகள், நான்கு சிம் அட்டைகள் மற்றும் வேறொருவரின் தேசிய அடையாள அட்டை ஆகியவற்றையும் சந்தேகநபரிடமிருந்து பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

மேல் மாகாண வடக்கு குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


Share this Article on :

வினோதம்

Comments

 

© Copyright Sammanthurai News 2015| Design by | Published by www.sammanthurai.net | .