News Update :

Follow on twitter

Follow on twitter

ads

ads
<>தற்போது கிடைத்த செய்திகள்>>

பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் இரத்த வங்கி திறப்பு

( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )

வைத்திய அத்தியேட்சகர் ஏ.எம்.எம்.இஸ்ஸதீன் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் சுகாதார இராஜாங்க அமைச்சர் எம்.ரி.ஹசன் அலி பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு, பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் இரத்த வங்கியினைத் திறந்து வைக்கும் நிகழ்வு 01.03.2015 இடம் பெற்றது. 

இந்நிகழ்வில் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் எம்.சீ.பைசால் காசீம், கிழக்கு மாகாண முதலமைச்சரின் அம்பாரை மாவட்ட இணைப்பாளர் பீ.ஏ.பளீல், சுகாதார இராஜாங்க அமைச்சின் செயலாளர் திருமதி.பேள் வீரதுங்க, அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர்களான எச்.ஏ.சப்றி, எம்.நியாஸ், சுகாதார மாகாணப் பணிப்பாளர் கே.முருகானந்தம், கல்முனைப் பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் ஏ.அலாவுதீன், பொத்துவில் பிரதேச சபை தலைவர் எம்.எஸ்.அப்துல் வாசித், பிரதேச சபை உப தலைவர் ஏ.எம்.எம்.தாஜுதீன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், சுகாதார அமைச்சின் உயரதிகாரிகள் எனப் பலரும் இதில் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து இங்கு இடம்பெற்ற கலந்துரையாடலில் வைத்திய அதிகாரிகள், வைத்தியசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்களால் வைத்தியசாலையின் அவசியத் தேவைகள் பல எடுத்துக் கூறப்பட்டன.
 “அவற்றை அரசாங்கத்தின் நூறு நாள் வேலைத் திட்டத்தில் உள்வாங்கி செய்து தருவதோடு, இப்பிரதேசத்தில் பறிக்கப்பட்ட மக்களின் காணிகளையும் பெற்றுத்தருவதற்காக பிரதம மந்திரி றனில் விக்கிரம சிங்கவுடன் பேசி, நடவடிக்கை எடுத்துள்ளதாக” சுகாதார  இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் வைத்தியசாலைக்குத் தேவையான வைத்திய உபகரணங்கள் சிலவும் அமைச்சரினால் கையளிக்கப்பட்டன. 
இதனைத் தொடர்ந்து வைத்தியசாலை உத்தியோகத்தர்களினாலும், பிரதேச மக்களினாலும் அமைச்சர் ஹசன்அலி பொன்னாடை போற்றி, நினைவுச் சின்னங்கள், வாழ்த்துப் பத்திரங்கள் என்பன வழங்கி கௌரவிக்கப்பட்டார்.










Share this Article on :

வினோதம்

Comments

 

© Copyright Sammanthurai News 2015| Design by | Published by www.sammanthurai.net | .