News Update :

Follow on twitter

Follow on twitter

ads

ads
<>தற்போது கிடைத்த செய்திகள்>>

இந்தியரை ரெயில் முன் தள்ளி கொன்ற அமெரிக்க பெண்ணுக்கு 25 வருட சிறை தண்டனை வழங்க வாய்ப்பு

அமெரிக்காவில் இந்தியர் ஒருவரை ரெயில் வரும்போது தண்டவாளத்தில் தள்ளி விட்டு கொலை செய்த அமெரிக்க பெண்மணிக்கு 25 வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட கூடும் என தகவல் கூறுகிறது.

கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் 27ந்தேதி இரவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்தியர் படுகொலை தொடர்பாக குயின்ஸ் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி கிரிகோரி லசாக் முன்பு எரிகா தனது குற்றத்தை ஒப்பு கொண்டுள்ளார். அமெரிக்காவின் குயின்ஸ் பகுதியை சேர்ந்தவர் எரிகா மெனண்டஸ். அதே பகுதியில் வசித்து வந்த இந்தியர் சுனந்தோ சென். இவருக்கு வயது 46. ரெயில் வரும்போது அதன் பாதையில் பயணி ஒருவர் தள்ளி விடப்படுவது என்பது மோசமான ஒரு கனவு. இந்த குற்றத்தை எரிகா ஒப்பு கொண்டுள்ளதாக லசாக் கூறியுள்ளார்.

சென், பின்புறத்தில் இருந்து தள்ளி விடப்பட்டு உள்ளார். தன்னை தற்காத்து கொள்வதற்கு அவருக்கு வாய்ப்பு இல்லை என நீதிபதி கூறியுள்ளார். வருகிற ஏப்ரல் 29ந்தேதி, எரிகாவுக்கு 22 முதல் 25 வருடங்கள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக லசாக் கூறியுள்ளார். குற்ற புகாரின்படி, எரிகா தனக்கு தானே பேசி கொண்டும் மற்றும் பிளாட்பார்மில் முன்னும் பின்னும் வேகமாக நடந்து கொண்டும் இருந்துள்ளார்.

சென் 8 மணியளவில் ரெயில் வருவதற்காக காத்து கொண்டு இருந்துள்ளார். ரெயில் நிலையத்திற்குள் ரெயில் வந்தவுடன் எரிகா, பின்னால் இருந்து சென்னை தண்டவாளத்தில் தள்ளி விட்டுள்ளார். சென் ரெயில் மோதி பலத்த காயமடைந்து மரணமடைந்தார். இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் மீதான வெறுப்புணர்ச்சியே சென்னை தள்ளி விடுவதற்கான தூண்டுகோலாக தனக்கு இருந்தது என விசாரணை அதிகாரிகளிடம் எரிகா கூறியுள்ளார்.


சென் மீதான இந்த தாக்குதல் உடனே நடந்தாலும், தன்னை பாதுகாப்பதற்கு சென் முயற்சி செய்து உள்ளார் என எரிகா கூறியுள்ளார். இந்தியாவை சேர்ந்தவரான சென் குயின்ஸ் பகுதியில் பல வருடங்களாக வசித்து வந்துள்ளார். அவர் கொலம்பியா பல்கலை கழகம் அருகே சொந்தமாக வர்த்தகம் செய்து வந்துள்ளார்.
Share this Article on :

வினோதம்

Comments

 

© Copyright Sammanthurai News 2015| Design by | Published by www.sammanthurai.net | .