19 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த வர்த்தமானி அறிவித்தல் நேற்றிரவு வெளியிடப்பட்டதாக அரச அச்சகத்தின் பிரதானி காமினி பொன்சேக்கா குறிப்பிட்டார்.
ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைப்பதற்கு முன்னுரிமை அளிக்கும்இ 19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு நேற்று முன்தினம் அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.