.jpg)
அண்மையில் ஊடக சந்திப்பொன்றை
நடத்திய திஸ்ஸ அத்தநாயக்க, ரணில் - மைத்திரி இடையே செய்து கொள்ளப்பட்ட இரகசிய ஒப்பந்தம்
என்று கூறி ஆவணம் ஒன்றை காண்பித்தார். அதன்பின் அந்த ஆவணம் பொய்யானது என்றும் அதில்
உள்ள தனது கையெழுத்து போலியாக இடப்பட்டுள்ளதென்றும் தெரிவித்து எதிர்கட்சித் தலைவர்
ரணில் விக்ரமசிங்க பொலிஸ் அதிபருக்கு கடிதம் அனுப்பி இது தொடர்பில் உரிய விசாரணை நடத்துமாறு
கேட்டிருந்தார். அதன் அடிப்படையில் திஸ்ஸ
அத்தநாயக்கவிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது என்றும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.