News Update :

Follow on twitter

Follow on twitter

ads

ads
<>தற்போது கிடைத்த செய்திகள்>>

மாவடிப்பள்ளிப் பாலத்தின் மீது நீர்ப்பரம்பல்

-ஸப்னி அஹமட் -
அம்பாறை மாவட்டத்தில் நேற்று முதல் பெய்து வரும் அடைமழை காரணமாக தாழ்நிலப் பிரதேசங்களில் வெள்ளம் அபாயம் ஏற்பட்டுள்ளதுடன் கல்முனை-அம்பாறை போக்குவரத்திற்கான மாவடிப்பள்ளிப் பாலத்தின் மீதான நீர்ப் பரவல் அதிகரித்து வருவதனால் போக்குவரத்துச் சிரமம் ஏற்பட்டுள்ளது.

கடந்து சில நாட்களாக இப் பிரதேசத்தில் இடைவிடாத மழை பெய்து வருகின்ற போதும் நேற்று முன்தினம் முதலான அடைமழையினால் மாவடிப்பபள்ளிப் பாலத்தில் நீர்ப்பபரம்பல் அதிகரித்து வருகின்றது.

மேட்டார் வண்டி மற்றும் துவிச்சக்கரவண்டிகளில் பயணிப்போர் அவதானமாக செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வீதிப் போக்குவரத்துப் பொலிஸார் கடமையிலிருந்து வீதி ஒழுங்கினை மேற்கொள்வதுடன் நீர் ஓடவிடாமல் தடுக்கும் ஆற்று வாழைகளும் அகற்றப்பட்டு வருகின்றன. இன்னும் ஓரிரு தினங்களுக்கு அடை மழை பெய்யுமாயின் இதனூடாக போக்குவரத்தில் சிரமம் ஏற்பட வாய்ப்புண்டு.

நேற்றைய அடைமழை காரணமாக பாடசாலை மற்றும் அலுவலகங்களின் வரவுகள் மந்தமாக இருந்ததனை அவதானிக்க முடிகின்றது.மக்களின் இயல்பு நிலையும் இம் மழையினால் பாதிக்கப்பட்டுள்மையினை அவதானிக்க முடிகின்றது.
Share this Article on :

வினோதம்

Comments

 

© Copyright Sammanthurai News 2015| Design by | Published by www.sammanthurai.net | .