News Update :

Follow on twitter

Follow on twitter

ads

ads
<>தற்போது கிடைத்த செய்திகள்>>

சம்மாந்துறையில் புலமை வெற்றியாளர்களை பாராட்டி விழா

 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களை பாராட்டு நிகழ்வு சம்மாந்துறை முஸ்லிம் மகளிர் வித்தியாலயத்தில் 2013.12.04 இன்று நடைபெற்றது.

இந் நிகழ்வு பாடசாலையின் அதிபர் ரீ.எம். தௌபீக் அவர்களின் தலைமையில் நடைபெற்றதுடன் பிரதம அதிதியாக சம்மாந்துறையின் புதிய வலயக்கல்விப் பணிப்பாளர் MSA. ஜலீல், மற்றும் பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான SLA. றகீம், MHM. லாபீர், உதவிக் கல்விப் பணிப்பாளர்

ALM. காதர் மற்றும் சமாதனக்கல்வி இணைப்பாளர். ஏ.ஏ. முகம்மட், ஆசிரிய ஆலோசகர் கைறுன்னிஸா அகமட் ஆகியோர் கலந்து சிறப்பித்ததுடன் மாணவர்களை வளப்படுத்திய ஆசிரியர்களான றகீமா மன்சூர், ஏ.பீ. பரீதா, எஸ்.எல். மன்சூர், அமீறா றிம்லான் ஆகியோருடன் இணைந்து சித்தி பெற்ற 41 மாணவர்களுக்கு நினைவுச்சின்னமும் ஆசிரியர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டது.

இம்முறை கூடுதலான மாணவர்களை சித்தியடைய வைத்த பெருமையும் இப்பாடசாலையைச் சாறும். அத்துடன் 190 புள்ளிகளைப் பெற்ற மாணவனான ARZ. ஹனீன் அவர்களுக்கு விசேட பாராட்டுக்களும் பெற்றோர்களால் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வு சிறப்பாக நடைபெறுவதற்குரிய ஏற்பாடுகளை அதன் பிரதி அதிபர் ஏ.எம்.தாஹாநழீம் முன்னின்று நடத்தினார்.
இந்நிகழ்வினை சித்தியடைந்த மாணவர்களின் பெற்றார்களினால் ஏற்பாடு செய்யப்பட்டது.

Share this Article on :

வினோதம்

Comments

 

© Copyright Sammanthurai News 2015| Design by | Published by www.sammanthurai.net | .