News Update :

Follow on twitter

Follow on twitter

ads

ads
<>தற்போது கிடைத்த செய்திகள்>>

சம்மாந்துறை படித்தவர்களைக் கொண்ட ஊர் – அமைச்சர் ஹக்கீம்


சம்மாந்துறைப் பிரதேசத்தின் கல்வி அபிவிருத்தியில் கடந்த ஒரு சில வருடங்களாக தேக்கநிலை காணப்பட்டு வருவதாக பரவலாக போசப்பட்டு வந்தது இன்றும் பேசப்பட்டு வருகின்றது இருந்த போதிலும் சம்மாந்துறையின் கல்வி மட்டம் தொடர்பாக அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்கள் வாழுகின்ற ஏனைய பிரதேசங்களுடன் ஒப்பிடுகின்ற போது பாரிய பின்னடைவை சந்தித்துள்ளதா என்று பார்க்கின்ற போது அங்கு ஒரு பாரிய பின்னடைவு அடையவில்லை என்றுதான் நான் கருதுகின்றேன் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்ததார்.
சம்மாந்துறை சமூக மேம்பாட்டு ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் ஐ.எல்.நாசர் தலைமையில் சம்மாந்துறை அல்அர்ஷத் மகா வித்தியாலய கேட்போர் கூடத்தில் நடைபெற்ற சம்மாந்துறைப் பிரதேசத்தில் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த புலமையாளர்கள் 84 பேரையும் அவர்களின் பெற்றோர்கள் மற்றும் அதிபர்கள் ஆசிரியர்கள் ஆகியோர்களைப் பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்ததார்.

அவர் தொடர்ந்து உரை நிகழ்த்துகையில்

சம்மாந்துறை மத்திய கல்லூரியின் வரலாற்றில் 1977ம் ஆண்டு 95 வீதமான மாணவர்கள் பல்கலைக்கழக நுளைவு பெற்று வரலாறு படைத்தமை இன்றும் நினைவு கூறப்படுகின்றன. அது மாத்திரமன்றி சம்மாந்துறை மகளிர் வித்தியாலயம் 1982ம் ஆண்டிலிருந்து இன்று வரைக்கும் புலமைப்பரிசில் பரீட்சையில் ஒப்பீட்டு ரீதியில் கூடுதலான மாணவர்கள் சித்தியடைந்து வருகின்ற ஒரு வரலாறும் இந்த ஊருக்கு உண்டு.

கல்வி வரலாற்றில் அவ்வப்போது தேக்க நிலை காணப்படுகின்ற போது அந்த தேக்க நிலைக்கு தனியாக ஆசிரியரையோ,அதிபர்களையோ,பெற்றோர்களையோ,கல்வி நிர்வாகத்தையோ, ஏன் அரசியல்வாதிகளையோ குறை கூறுவது ஒரு நல்ல விமர்சனமாக முடியாது என நான் கருதுகின்றேன்

ஒருங்கிணைந்த செயற்பாட்டில் எங்கோ ஒரு இடத்தில் இடைவெளி ஏற்பட்டுள்ளது என்று தான் பார்க்கப்பட வேண்டும் என்பது என்னுடைய பார்வையாகும். மாறாக அதற்கு காரணம் என்னவென்று தேடி அதை நாம் தீர்த்துவிட்டோம் என்று உடனடியாக பிரகடனம் செய்வது என்பது கஷ்டமான காரியமாகும்.

இந்த நிலையிலிருந்து நாம் முன்னேற வேண்டுமாயின் இந்த நாட்டின் கல்வித்துறையில் மறுசீரமைப்பு அவசியமாகின்றது. நாங்கள் அதனை ஏற்படுத்த பாராளுமன்றத்தில் தனிச்சட்டம் ஒன்றை கொண்டுவர தயாராகிவருகின்றோம். இந்த கல்விச் சட்டத்தை கொண்டு வருவதற்கு முன்பே இருக்கின்ற எங்களுடைய மனித வளத்தையும்,பௌதீக வளத்தையும் கொண்டு உச்சப் பயன்பாட்டை அடைந்து கொள்ளவேண்டும் என்பதற்காகவே இன்று 1000 பாடசாலைகள் அபிவிருத்தி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலமாக இருக்கின்ற வளங்களைக் கொண்டு உச்சப் பயன்பாட்டை அடைவது ஆகும்.

இதனை அடைந்து கொள்ள நாங்கள் வரவு செலவுத்திட்டத்தில் 6 சதவீமான பணம் கல்வித்துறைக்கு ஒதுக்கப்பட வேண்டுமென்று பல ஆண்டுகளாக தெரிவிக்கப்பட்டு வருகின்றபோதும் அந்த இலக்கு இன்னும் எட்டப்படவில்லை அதே போன்றுதான் இந்த வருட வரவு செலவுத்திட்ட ஒதுக்கீட்டில் கல்விக்கான ஒதுக்கீடு போதியளவு எட்டப்படவில்லை என எதிர்கட்சிகள் விமர்சனம் செய்கின்ற காலமாக இருந்து கொண்டிருக்கின்றது.

அதே போன்றுதான் இந்த ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை 5ம் ஆண்டில் நடாத்துவது மாணவர்களுக்கு பாரிய சுமை என்பதுடன் உளவியல் ரீதியில் தாக்கத்துக்கு உட்படுகின்றனர் என்பது தொடர்பாக அண்மையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் காரசாரமான விவாதங்கள் நடைபெற்றது. இதற்கு கூடுதலானவர்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர். அதிலும் கூட சர்ச்சை நிலவுகின்றது.

சம்மாந்துறைப் பிரதேசத்தின் கல்வித்துறை அடைவுகளில் தற்போது கொஞ்சம் பின்னடைவுகள் இருக்கின்றது என்ற விமர்சனம் இருந்தாலும் சம்மாந்துறை என்ற ஊர் கல்வித்துறையில் பாரியளவு உச்ச நிலைக்கு முன்னேறிய வரலாறுகள் உண்டு. அது சட்டத்துறையை எடுத்துக் கொண்டாலும் சரி, மருத்துவத்துறையை எடுத்துக் கொண்டாலும் சரி,பொறியியல்துறையை எடுத்துக் கொண்டாலும் சரி நல்ல படித்தவர்களைக் கொண்ட ஊர் என்பதை மறைக்க முடியாது.

அரசியல்வாதிகள், கல்வியியலாளர்கள், பெற்றோர்கள் எல்லோரும் ஒன்றிணைந்த புரிந்துணர்வுடனான செயற்பாடு தேவையாகும். இதைவிடுத்து எங்கோ ஓர் இடத்தில் ஏற்பட்ட ஒரு இடைவெளியினை வைத்துக் கொண்டு அதனைப்பற்றி குறை கூறிக் கொண்டு திரிவதை விட்டுவிடவேண்டும.;

இன்று இந்த சமூக நல மேம்பாட்டு ஒன்றியம் இவ்வாறான ஒரு நிகழ்வை ஏற்படுத்தியதன் மூலமாக நாம் எமது கல்வித்துறையினை கட்டியெழுப்புவதற்கான மீளாய்வாகவும் கவனயீர்ப்பாகவும் கொண்டு நாம் செயற்பட வேண்டும் எனவும் கூறியதுடன் நான் அம்பாறை மாவட்டத்தின் பல்கலைக்கழக நுளைவு தொடர்பான ஒரு ஆய்வை மேற்கொண்டிருந்தேன் அவற்றின்படி சராசரியாக அம்பாறை மாவட்டத்தில் 350 முஸ்லிம் மாணவர்களும் ,130 தமிழர்களும்,100 சிங்களவர்களும் பல்கலைக்கழகம் செல்கின்றனர். இது எமது விகிதாசாரத்தை விட கூடுதலானதாகும். இது எமக்கு பல்கலைக்கழக தரப்படுத்தலினால் எமக்கு கிடைத்த வாய்ப்பாகும்.

இதைவிடுத்து எமது அரசியல் கோரிக்கை காரணமாக அதாவது தனி நிர்வாக மாவட்டம் கோரிக்கைகளின் காரணமாக சில பாதிப்புக்களைக் சந்திக்க நேரிடும் எனவேதான் நாம் இந்த விடயத்தில் நிதானமாக சிந்தித்து சூட்சுமமான முறையில் செயற்பட்டு ஒரே நிர்வாக மாவட்டத்தில் தனியான தமிழ்பேசும் அலகு அல்லது மேலதிக நிர்வாக மாவட்டம் ஒன்றை அடைந்து கொள்வதற்கான நடைமுறைகளை கையாள்வதாகவும் அமைச்சர் ஹக்கீம் தெரிவித்தார்.

இந்த வைபவத்தில் கிழக்கு மாகாண சுகாதார சுதேச வைத்தியத்துறை அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர், பிரதேச செயலாளர் ஏ.மன்சூர்,சம்மாந்துறைப் பிரதேச சபை உறுப்பினரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான எஸ்.எம்.எம்.முஸ்தபா,பிரதிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எல்.அப்துல் றஹீம்,பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஜயந்த தஹனக்க, அமைச்சரின் இணைப்புச் செயலாளர் றஹ்மத் மன்சூர்,மாகாண அமைச்சரின் பிரத்தியோக செயலாளர் சட்டத்தரணி எம்.எம்.சஹூபிர் உட்பட அதிபர்கள், கல்விமான்கள் பலரும் கலந்து கொண்டனர்.
Share this Article on :

வினோதம்

Comments

 

© Copyright Sammanthurai News 2015| Design by | Published by www.sammanthurai.net | .