போலி 2000 ரூபாய் நாணயத்தாளுடன் ஒருவர் காலி துறைமுகப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.சந்தேகநபர் தனது முச்சக்கர வண்டியின் புகை பரிசோதனைக்காக வந்திருந்த போதே கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காலி ஹபராதுவ பகுதியை சேர்ந்த 65 வயதான ஒருவரே இவ்வாறு கைதாகியுள்ளார்.
சந்தேகநபரை இன்று (03) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.