News Update :

Follow on twitter

Follow on twitter

ads

ads
<>தற்போது கிடைத்த செய்திகள்>>

அதி நவீன முறையில் நிர்மாணிக்கப்பட்ட மூன்று மாடி கொண்ட அக்கரைப்பற்று மாநகர சபைக் கட்டடம்

அதி நவீன முறையில் நிர்மாணிக்கப்பட்ட மூன்று மாடி கொண்ட அக்கரைப்பற்று மாநகர சபைக் கட்டட திறப்பு விழா 29.09.13 மாநகர முதல்வர் அதாஉல்லா அஹமட் ஸகி தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா மற்றும் அமைச்சின் செயலாளர் ஆர்.ஏ.ஏ.கே.ரணவக்க, பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர், கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை உள்ளிட்ட பல அதிதிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 

அக்கரைப்பற்று பட்டினப்பள்ளிவாசல் முன்றலில் துஆப் பிரார்த்தனையுடன் முஸ்லிம், தமிழ் மற்றும் சிங்கள இனத்தையும் சார்ந்த பாரம்பரிய கலை,கலாசார நிகழ்வுகளுடன் வீதி ஊர்வலமாக அக்கரைப்பற்று - கல்முனை வீதியூடாக அதி நவீன முறையில் அமையப்பெற்ற மாநகர வளாகம் வரை அதிதிகள் அழைத்து வரப்பட்டனர். 


 இப்புதிய கட்டடத்தின் பெயர் கல்லின் திறையை பாராளுமன்ற உறுப்பினர் அஸ்வர் ஹாஜியார் திறந்து வைத்ததைத் தொடர்ந்து அதிதிகள் மாநகர சபையின் கட்டடத்தை பார்வையிடப்பட்டனர். பின்னர் சபை அமர்வு நடைபெறும் இடத்திலும் துஆ பிரார்த்தனையும் இடம்பெற்றது.

இக்கட்டட நிர்மாணத்திற்க 110 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this Article on :

வினோதம்

Comments

 

© Copyright Sammanthurai News 2015| Design by | Published by www.sammanthurai.net | .