News Update :

Follow on twitter

Follow on twitter

ads

ads
<>தற்போது கிடைத்த செய்திகள்>>

அஸ்-ஸிராஜ் மகாவித்தியால நுழைவாயல் திறப்பு விழா

சம்மாந்துறை சாளம்பைக்கேணி அஸ்-ஸிராஜ் மகாவித்தியாலயத்தில் மைஹோப் நிறுவனத்தின் நிதியின் மூலம் நிர்மானிக்கப்பட்ட பாடசாலை நுழைவாயல் திறப்பு விழா 23.09.2013 எஸ்.எம்.எம்.யூசுப் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட இப்பாடசாலையின் பழைய மாணவரும், மைஹோப் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளருமான சித்தீக் நதீர் தனது சொந்த நிதியின் மூலம் நிர்மானிக்கபட்ட நுழைவாயலைத் திறந்து வைத்ததோடு, நினைவுக் கல்லையும் திரை நீக்கம் செய்து வைத்தார்

அதிதிகளாக சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர், அக்கரைப்பற்று கல்வி வலயத்தின் கணக்காளர் றிஸ்வி யாஹ்சர் ஆகியோரும் கலந்து கொண்டனர். பிரதம அதிதிக்கு வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர்,எஸ்.எம்.எம்.யூசுப், மற்றும் பிரதி அதிபர் எம்.எச்.எம்.நஸீம்,அபிவிருத்தி சபை உறுப்பினர்கள் பொன்னாடை போர்த்தி, மாலை அணிவித்து, நினைவுச்சின்னம் வழங்கி கௌரவித்தனர் மாணவர்களின் கலை நிகழ்சிகளும் அரங்கேற்றப்பட்டன.









Share this Article on :

வினோதம்

Comments

 

© Copyright Sammanthurai News 2015| Design by | Published by www.sammanthurai.net | .