எமது நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த பொலிஸ் அதிகாரிகளால் மாத்திரம் முடியாது பொதுமக்கள் அதாவது சிவில் சமுகத்தின் ஒத்துழைப்பு மிகவும் முக்கயமாகும் அந்த அடிப்படையிலேதான சிவில் பாதுகாப்புக் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளது என அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரும் பதில் பொலிஸ் ஊடகப் போச்சாளருமான சட்டத்தரணி அஜித்ரோஹன தெரிவித்தார்.
ஆசிய மன்றத்தின் அனுசரனையுடன் அம்பாறை மாவட்டத்தின் கல்முனை,சம்மாந்தறை,சவளக்கடை பொலிஸ் நிலையங்களுக்குட்பட்ட சிவில் பாதுகாப்பு குழு உறுப்பினர்களுக்கான எதிர்கால வேலைத்திட்டம் 15.09.2013 ஞாயிற்றுக் கிழமை சம்மாந்துறை அப்துல் மஜீட் நகர மண்டபத்தில் நடைபெற்றது.