News Update :

Follow on twitter

Follow on twitter

ads

ads
<>தற்போது கிடைத்த செய்திகள்>>

கிழக்கின் மறுமலர்ச்சி..

கிழக்கு மாகாண விவசாய, மீன்பிடி, கால்நடை, சிறுகைத்தொழில், அபிவிருத்தி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் ஏற்பாட்டில் இன்று ஞாயிற்றுக் கிழமை (2013.08.18) “கிழக்கின் மறுமலர்ட்சி” என்ற தொணிப்பொருளின் கீழ் மாபெரும் கண்காட்சி ஒன்று கிழக்கு மாகாண மேற்படி விடயங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் ஹாபீஸ் நஸீர் அகமட் அவர்களினால் உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைக்கப் பட்டுள்ளது.

மட்./ஏறாவூர் றஹ{மானியா வித்தியாலயத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்த ஆரம்ப நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் கிழக்கு மாகாண சபையின் தவிசாளர் ஆரியவதி கலப்பதி,கிழக்கு மாகாண பிரதம செயலாளர் அபயகுணவர்த்ன,ஏறாவூர் நகர பிதா அலிசாஹிர் மௌலான கிழக்குமாகாண விவசாய அமைச்சின் செயலாளர் பத்மநாதன்,சுககாதார அமைச்சின் செயாலளர் அமலநாதன்,ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இன்று 28.08.2013 ஆரம்பிக்கப்பட்ட கண்காட்சியானது. எதிர்வரும் 20 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. தொடர்ந்து மூன்று நாட்கள் காலை 9.30 மணி தொடக்கம் இரவு 9.00 மணிவரை இக்கண்காட்சி நடைபெறவுள்ளது.

கிழக்கு மாகாணத்தினைப் பிரதிபலித்து நடாத்தப்படும் இந்தக் கண்காட்சியில்; விவசாயனப் பொருட்கள் மற்றும் பசளை, விவசாய உபகரணங்கள் மற்றும் இயந்திரங்கள், காய்கறி மற்றும பழ உறபத்தி,பால்பண்ணை முகாமைத்துவம், கால்நடை தீவனம் மற்றும் புல் உற்பத்தி, கோழி வளர்ப்பும் முட்டை உற்பத்தியும், நெசவு உற்பத்திப் பொருட்கள், பன் உற்பத்திப்பொருட்கள், தும்பு மற்றும் மட்பாண்ட உற்பத்தி, மீன்பிடி உபகரண செயற்பாடுகள், அலங்கார மீன் வளர்ப்பு, சுற்றுலாத்துறைச் செயற்பாடுகள்
போன்ற பல அம்சங்களை மையப்படுத்தி இக்கண்காட்சியின் காட்சிக் கூடங்கள் அமைந்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.



















Share this Article on :

வினோதம்

Comments

 

© Copyright Sammanthurai News 2015| Design by | Published by www.sammanthurai.net | .