News Update :

Follow on twitter

Follow on twitter

ads

ads
<>தற்போது கிடைத்த செய்திகள்>>

தமிழீழ மாநாட்டில் தென் கிழக்கு பல்கலை விரிவுரையாளர் பங்கேற்கவில்லை; உப வேந்தர்.

லண்டனில் நடைபெற்ற தமிழீழம் தொடர்பான மாநாட்டில் இலங்கையைச் சேர்ந்த பல்கலைக்கழக பேராசிரியர்கள் நால்வர் பங்கேற்றுள்ள விவகாரத்தில் தென் கிழக்கு பல்கலைக்கழகம் சம்பந்தப்படவில்லை.

லண்டனில் நடைபெற்ற தமிழீழ மாநாட்டில் தென் கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவரும் பங்கேற்றிருந்ததாக ஊடங்கள் செய்தி வெளியிட்டிருந்தமை தொடர்பில் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

'' குறித்த செய்திகளில் உண்மையில்லை. எமது பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த எவரும் லண்டன் செல்லவோ குறித்த மாநாட்டில் பங்கேற்கவோ இல்லை. 

இது தொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளோம்'' என்றும் உபவேந்தர் மேலும் குறிப்பிட்டார். 

இம் மாநாட்டில் பங்கேற்ற விரிவுரையாளர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என உயர் கல்வி அமைச்சரும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவும் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share this Article on :

வினோதம்

Comments

 

© Copyright Sammanthurai News 2015| Design by | Published by www.sammanthurai.net | .