(Aug1)அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கடந்த 1994-ம் ஆண்டில் சைமன்ஸ் பவுண்டேஷன் என்ற தொண்டு நிறுவனம், ஜிம் மற்றும் மரிலின் சைமன்ஸ் என்பவர்களால் ஆரம்பிக்கப்பட்டது.
இவர்களின் குறிக்கோள், அடிப்படை அறிவியல், கணிதம் ஆகிய துறைகளின் ஆராய்ச்சி எல்லைகளை விரிவுபடுத்துவதாகும். எனவே,ஆண்டுதோறும் இந்தத் துறைகளில் புதிய கண்டுபிடிப்புகளில் சாதனை புரிவோருக்கு விருதுகளும், பரிசுத்தொகையும் வழங்கப்படும்.
இந்தத் துறைகளின் 2013-ம் ஆண்டுக்குரிய விருதினை 13 பேர் பெறுகின்றனர். இவர்களுள் நான்கு பேர் அமெரிக்கவாழ் இந்தியர்கள் ஆவார்கள்.
ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கணித பேராசிரியரான கண்ணன் சுந்தர்ராஜன், ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் கம்ப்யூட்டர் பிரிவில் பணிபுரியும் சலில் பி வதன், மசாசுசெட்ஸில் பௌதிகத்துறையில் பணிபுரியும் தோத்தாத்ரி மற்றும் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் கம்ப்யூட்டர் பிரிவில் பணிபுரியும் ராஜீவ் அலுர் ஆகியோரே இந்த விருதினைப் பெரும் இந்தியர்கள் ஆவார்கள்.