சம்மாந்துறை வலயக்கல்வி பணிமனையும், வலய அதிபர்கள் சங்மும் இணைந்து ஏற்பாடு செய்த மூன்றுநாள் கல்விக்கண்காட்சி சம்மாந்துறை அல்-மர்ஜான் பெண்கள் பாடசாலையில் இன்று (2013.07.02) காலை 8.00 மணி அளவில் வைபவ ரீதியாக வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.கே.மன்சூர் தலைமையில் ஆரம்பமாகியது.
கண்காட்சியை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எல்.ஏ. அமீர், மாகாண சபை உறுப்பினர் கலையரசன் ஆகியோர் அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்கள் அதிபர் ஹபீரா ஷரீப் உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்.
இன் நிகழ்வு அல்-மர்ஜான் முஸ்லிம் மகளிர் கல்லூரியில் இன்று முதல் (02.07.2013) மூன்று நாட்கள் காலை 8மணி முதல் மாலை 5மணி வரை நடைபெற ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.