அஷ்ஷைக்.எம்.பி.அலியார் (ஹஸரத்)
அதிபர், தப்லீகுல் இஸ்லாம் அறபுக்கல்லூரி,
தலைவர்,ஜம்இய்யதுல் உலமா,
அமீர், மஜ்லிஸ் அஷ்ஷறா,
சம்மாந்துறை.
20-11-2012
தகப்பன் வழி கொண்டே குடி வழி கணிக்கப்படும்.
குடி வழி என்பது இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் தகப்பன் வழி கொண்டே கணிக்கப்படும் இதுவே அல்குர்ஆனின் கோட்பாடாகும். இது பற்றி அல்குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது (எனவே) நீங்கள் (எடுத்து வளர்த்த) அவர்களை அவர்களின் தந்தைய(ரின் பெயர்களைச் சொல்லி (இன்னாரின் பிள்ளையென) அழையுங்கள் அதுவே அல்லாஹ்விடம் நீதமுள்ளதாகும். ஆனால் அவர்களுடைய தந்தைய(ரின் பெய)ர்களை நீங்கள் அறியவில்லையாயின் அவர்கள் உங்களுக்கு சன்மார்க்க சகோதரர்களாகவும், உங்களுடைய நண்பர்களாகவும் இருக்கின்றனர். (முன்னர்) இது பற்றி நீங்கள் தவறு செய்திருந்தால் உங்கள் மீது குற்றமில்லை ஆனால் உங்களுடைய இருதயங்கள் வேண்டுமென்றே கூறினால் (உங்கள் மீது குற்றமாகும்). அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கிருபையுடையவனாகவும் இருக்கின்றான். (ஸ{றதுல் அஹ்ஸாப் - 05)
---------------------
இக்கருத்தே சம்மாந்துறை ஜம்இய்யதுல் உலமாவின் நிலைப்பாடுமாகும். தனது வளர்ப்பு மகனை தன்னுடைய மகனாக அழைக்க முடியாது என அல்குர்ஆன் தடைசெய்திருந்த போதும் எவ்வாறு சொந்த மகனை தனது தாய்வழி கொண்டு அழைக்க முடியும். இவ்வாறான மார்க்கத் தெளிவை கடந்த 2008 ம் ஆண்டு; அன்றிருந்த நம்பிக்கையாளர் சபைக்கு எழுத்து மூலமாக அறிவித்திருந்தோம்.
இதற்கு மாறாக தாய் வழியை அடிப்படையாகக் கொண்டு நூல் வெளியிடுவது கவலைக்குரிய விடயமாகும். எனவே தாய் வழி குடிக்கணிப்பு தவறானதும் இந்துக்களின் கலாச்சாரமுமாகும்.
முஹர்ரம் மாதம் சுன்னத்தான நோன்பு நோற்பதில் வேதக்காரர்களுக்கு மாற்றம் செய்யும் படி நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். எனவே வேதக்காரர்களைக் கூட பின்பற்றுவதற்கு இஸ்லாம் அனுமதிக்காத போது எவ்வாறு நாம் இந்துக்களின் கலாச்சாரத்தை பின்பற்றுவது?
ஆகவே இதிலிருந்து தவிர்ந்து எதிர் காலத்தில் ஆண்களின் குடி வழி முறையினை பின்பற்ற உலமா சபை, நம்பிக்கையாளர் சபை, மஜ்லிஸ் அஷ்ஷறா ஆகியோரின் ஆலோசனையைப் பெற்று செயல்படுவதோடு, இந்த இஸ்லாமிய புது வருடத்திலிருந்து இஸ்லாம் காட்டித் தந்த வழி முறைக்கு அமைவாக நடந்து கொள்ளுமாறும் அன்பாய் வேண்டிக் கொள்கிறோம்.
நன்றி – வஸ்ஸலாம்
இப்படிக்கு
அஷ்ஷைக்.எம்.பி.அலியார் (ஹஸரத்)