டெங்கு நோயாளியின் குருதியிலிலுள்ள நீரின் அளவு வேகமாக குறைவடைந்து செல்வது மிகவும் பாரதூரமாதொன்றாகும். கவலைக்கிடமான நிலையிலுள்ள நோயாளி ஒருவரை வைத்தியசாலை ஊhழியர்கள் 48மணி நேர கால பகுதியில் உள்ள ஒவ்வொரு செக்கனும் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்பது வைத்தியர்களின் கருத்தாகும், பணத்தினால் மதிப்பிடமுடியாத பெறுமதியான நேரமாக இது அமைகின்றது.

டெங்கு காய்ச்சலினால் பீடிக்கப்பட்டுள்ள சிறார்களை காப்பாற்றுவதற்கு இவ்வாறன அதிகளவு பணத்தை செலவு செய்ய நேரிட்டுள்ளது. ஏன் நாம் இத்தகைய நிலையை எதிர்நோக்கியியுள்ளோம். இவ்வாறான நிலையை எதிர்நோக்க வேண்டிய தேவையில்லை. தமது வீட்டு,சுற்றுபுற சூழலை தூய்மைபடுத்தி வைத்தியிருந்தால் மிகவும் இலகுவான முறையில் டெங்கு காய்ச்சலை தடுக்க முடியும்.