News Update :

Follow on twitter

Follow on twitter

ads

ads
<>தற்போது கிடைத்த செய்திகள்>>

அண்மைய குடிசன மதிப்பீட்டின்படி ஆண்களைவிட ஒரு இலட்சத்து 55 ஆயிரம் பெண்கள் அதிகம்

அண்மையில் மேற்கொள்ளப்பட்ட குடிசன வீட்டு வசதிகள் மதிப்பீட்டின் பிரகாரம் ஒருகோடியே மூன்று இலட்சத்து 57 ஆயிரம் ஆண்களும் (10357000) ஒரு கோடியே ஐந்து இலட்சத்து 12 ஆயிரம் பெண்களுமாக (10512000) மொத்தம் இரண்டு கோடியே எட்டு இலட்சத்து 69 ஆயிரம் பேர் (20,869000) நாட்டில் வசிப்பதாகத் தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன. 

மேற்படி கணக்கீட்டின்படி ஆண்களை விட ஒரு இலட்சத்து 55 ஆயிரம் பெண்கள் அதிகமாக இருப்பதாகவும் மதிப்பிடப்பட்டிருப்பதாக அமைச்சு சமர்ப்பித்துள்ள புள்ளி விபரத்தில் கூறப்பட்டுள்ளது.

நாட்டில் மொத்தமாக 36 ஆயிரத்து 807 கிராமங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு கிராமத்திலும் சராசரியாக 123 குடும்பங்கள் வசித்து வருகின்றன.

அத்துடன் நாடு முழுவதிலும் 14 ஆயிரத்து 22 கிராம சேவை உத்தியோகத்தர் பிரிவுகள் இருக்கின்ற அதேவேளை,அதே எண்ணிக்கையிலான உத்தியோகத்தர்கள் பதவியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

மேலும் 313 பிரதேச செயலகங்கள் உள்ள நிலையில் தற்போதைய கணக்கெடுப்பின் பிரகாரம் 309 பிரதேச செயலாளர்கள் கடமையில் உள்ளனர்.

உதவி அரசாங்க அதிபர் அலுவலகங்களின் எண்ணிக்கை 19 ஆக கணக்கிடப்பட்டுள்ள அதேவேளை, உதவி அரச அதிபர், உதவி பிரதேசசெயலக தலைவர் என்ற அடிப்படையில் 17 பேர் கடமையாற்றி வருகின்றனர்.

இது இவ்வாறிருக்க நாடு முழுவதுமான கணக்கெடுப்பின் பிரகாரம் ஒரு கோடியே மூன்று இலட்சத்து 57 ஆயிரம் ஆண்களும் ஒரு கோடியே ஐந்து இலட்சத்து 12 ஆயிரம் பெண்களுமாக மொத்தம் இரண்டு கோடியே எட்டு இலட்சத்து 69 ஆயிரம் பேர் வசித்து வருவதாக தொகை மதிப்பு புள்ளி விபரத் திணைக்களம் மதிப்பிட்டுள்ளது.

நாட்டின் சனத் தொகை மாவட்ட மட்டத்தில் நோக்குகையில்,

1) கொழும்பு 1321000 1263000 2584000
2) கம்பஹா 1070000 1121000 2191000
3) களுத்துறை 566000 578000 1144000
4) கண்டி 706000 741000 1447000
5) மாத்தளை 251000 253000 504000
6) நுவரெலியா 382000 386000 768000
7) காலி 533000 563000 1096000
8) மாத்தறை 411000 436000 847000
9) அம்பாந்தோட்டை 288000 288000 576000
10) யாழ்ப்பாணம் 292000 325000 617000
11) கிளிநொச்சி 81000 79000 160000
12) மன்னார் 55000 50000 105000
13) வவுனியா 86000 91000 177000
14) முல்லைத்தீவு 70000 74000 144000
15) மட்டக்களப்பு 265000 285000 550000
16) அம்பாறை 321000 333000 654000
17) திருகோணமலை 89000 191000 380000
18) குருணாகல் 781000 796000 1577000
19) புத்தளம் 392000 397000 789000
20) அனுராதபுரம் 429000 411000 840000
21) பொலன்னறுவை 217000 198000 415000
22) பதுளை 446000 451000 897000
23) மொனராகலை 227000 218000 445000
24) இரத்தினபுரி 575000 564000 1139000
25) கேகாலை 403000 420000 823000
Share this Article on :

வினோதம்

Comments

 

© Copyright Sammanthurai News 2015| Design by | Published by www.sammanthurai.net | .