News Update :

Follow on twitter

Follow on twitter

ads

ads
<>தற்போது கிடைத்த செய்திகள்>>

சம்மாந்துறை தப்லீகுல் இஸ்லாம் அரபுக் கல்லூரி மாணவர்களுக்கான பரிசளிப்பு விழாவும் மர நடுகை நிகழ்வும்

சம்மாந்துறை தப்லீகுல் இஸ்லாம் அரபுக் கல்லூரி மாணவர்களுக்கான பரிசளிப்பு விழாவும் மர நடுகை நிகழ்வும் அதிபர் அஷ்ஷெய்க் ஹசரத் எம்.பி.அலியார் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எல்.ஏ.அமீர், சவூதி அரேபிய தூதரகத்தின் பொதுசனத் தொடர்பு அதிகாரி ஐ.எல்.எம்.மாஹிர் மற்றும் ஜனாதிபதி இணைப்பாளர் எம்.எம்.ஏ.காதர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் சிறப்பு பேச்சாளராக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் கொழும்பு நகர தலைவரும் பத்வாக் குழுவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினருமான அஷ்ஷெய்க் எம்.எச்.எம்.யூசூப் முப்தி கலந்துகொண்டார்.

இன்நிகழ்வில் சம்மாந்துறை தப்லீகுல் இஸ்லாம் அரபுக் கல்லூரி மாணவர்களுக்கான ஒரு தொகுதி குர்ஆன் கிதாபுகளை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எல்.ஏ.அமீர் வழங்கிவைத்ததுடன் சவூதி அரேபிய தூதரகத்தின் பொதுசனத் தொடர்பு அதிகாரி ஐ.எல்.எம்.மாஹிர் கணனி தொகுதியினையும் இக்கலாசாலையின் பழைய மாணவர் மௌலவி தௌபீக் ஒலிபெருக்கி சாதனத்தொகுதியொன்றையும் வழங்கி வைத்தனர்.
Share this Article on :

வினோதம்

Comments

 

© Copyright Sammanthurai News 2015| Design by | Published by www.sammanthurai.net | .