News Update :

Follow on twitter

Follow on twitter

ads

ads
<>தற்போது கிடைத்த செய்திகள்>>

புனரமைக்கப்பட்ட வீதிகள் திறப்பு!

(07-04-12)'ஜைக்கா' திட்டத்தின் கீழ் 30 மில்லியன் ரூபா செலவில் சம்மாந்துறையில் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ள புதிய வீதி, பிர்தௌஸ் மற்றும் கலந்தர் வீதி மூன்று கிளை வீதிகள் உட்பட 6 கொங்ரீட் வீதிகள் திறந்து வைத்தல் மற்றும் 68 மில்லியன் செலவில் அமைக்கப்படவுள்ள அலிவன்னயார் வீதிக்கான அடிக்கல் நடும் வைபவம் என்பன இன்று கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எல்.ஏ.அமீர் தலைமையில் நடைபெற்றது.





இந்நிகழவில் உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா பிரதம அதிதியாகவும் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை கௌரவ அதிதியாகவும் கலந்து கொண்டனர்.

அத்துடன் பிரதேச செயலாளர் ஏ.மன்சூர், உள்ளுராட்சி உதவி ஆணையாளர் ஏ.ஜே.எம்.இர்ஷாட்.உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சரின் பொதுசன தொடர்பு அதிகாரி எஸ்.எம்.சபீஸ், இணைப்பதிகாரி ஏ.பி.தாவூத், மாகாண அமைச்சின் மேலதிக செயலாளர் சலாஹூதீன். பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எல்.சம்சுதீன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
Share this Article on :

வினோதம்

Comments

 

© Copyright Sammanthurai News 2015| Design by | Published by www.sammanthurai.net | .