(21-03-2012)அம்பாறை மாவட்டத்தில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள தேசத்திற்கு மகுடம் தேசிய திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் உள்ள 6 தமிழ் பிரதேச செயலகங்களின் அபிவிருத்திக்காக 600 கோடி ரூபா செயல்த் திட்டங்களுக்கான உத்தேசத் திட்டங்களை அரசாங்க அதிபரிடம் கையளித்துள்ளதாக கிழக்கு மாகாண விவசாய கால்நடை அமைச்சர் கலாநிதி துரையப்பா நவரெட்ணராஜா தெரிவித்தார்.
கல்முனை, ஆலையடிவேம்பு, திருக்கோவில், நாவிதன்வெளி, காரைதீவு,சம்மாந்துறை பிரதேசங்களில் இந்த அபிவிருத்தித் திட்டங்கள் விரைவில் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் கிழக்கு மாகாண விவசாய கால்நடை அமைச்சர் கலாநிதி துரையப்பா நவரெட்ணராஜா குறிப்பிட்டார்.