News Update :

Follow on twitter

Follow on twitter

ads

ads
<>தற்போது கிடைத்த செய்திகள்>>

துணை மருந்தாளர்கள் நேற்றும் வேலைநிறுத்தம்

நீதிமன்ற தடை உத்தரவையும் மீறி துணை மருத்தாளர்கள் நேற்று(20-03-2012) வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதுடன் ஆர்ப் பாட்டத்தினையும் முன்னெடுத்ததாக ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்தன.

துணை மருத்தாளர்களின் சேவை நிறுத்தம் காரணமாக நேற்று இரண்டு நோயாளிகள் உயிரிழந்திருப்பதுடன் மேலும் பலரது உடல்நிலை ஆபத்தான கட்டத்தை அடைந்திருப்பதாக சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரி வித்தார். அரசாங்க ஆஸ்பத்திரியில் கடமை யாற்றும் துணை மருந்தாளர்கள் நீதிமன்ற தடை உத்தரவையும் மீறி, வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளமை பாரதூர மான குற்றச்செயல் என்றும் அது நீதி மன்றத்தை அவமதிக்கும் செயல் எனவும் அமைச்சர் கூறினார்.

உயிரிழந்திருக்கும் இரு நோயாளர்க ளும் மருத்துவ அறிக்கைகளை துணை மருந்தாளர்கள் உரிய நேரத்தில் வழங்கியிருந்தால் அவர்களை காப் பாற்றியிருக்கலாமென மருத்துவ ஆலோசகர்கள் தமது முறைப்பாட்டில் சுட்டிக்காட்டியிருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
துணை மருந்தாளர்கள் தமது கடமை க்கு சமுகமளித்து உரிய முறையில் சேவையாற்றாமை காரணமாகவே இவ்வாறான உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்ப தாகவும் சுகாதார பணியாளர் களின் வேலை பகிஷ்கரிப்பு காரணமாக நோயாளர்கள் உயிரிழக்க நேரிட்டிருப் பது இதுவே முதற்தடவையெனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Share this Article on :

வினோதம்

Comments

 

© Copyright Sammanthurai News 2015| Design by | Published by www.sammanthurai.net | .