கராட்டே, ஜுடோ,பேஸ்போல் விளையாட்டுப் பயிற்சிக்காக பயிற்சியாளர்களைப் பெற்றுக் கொடுக்க ஜப்பான் தீர்மானித்துள்ளது. ஜப்பானிய தூதுவர் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேயை விளையாட்டுத்துறை அமைச்சில் சந்தித்தபோது இதுபற்றித் தெரிவித்தார்.
2013ல் இந்திய புதுடில்லி நகரில் நடைபெற்ற ‘சார்க்’ விளையாட்டு விழாவை நோக்காகக் கொண்டு விளையாட்டு அமைச்சு 23 விளையாட்டுக்களுக்காக வெளிநாட்டுப் பயிற்சியாளர்களை பெற்றுக்கொள்ள உள்ளது.
இவ்விடயமாக புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்வது தொடர்பாக ஆராய்வதாகவும் ஜப்பான் தூதுவர் தெரிவித்தார். விளையாட்டு வீரர்களுக்கும் அதிகாரிகளுக்கும் மேலதிக பயிற்சிக்காக ஜப்பான் செல்லும் வாய்ப்புக்களை ஏற்படுத்தித் தருமாறு விடுக்கப்பட்ட கோரிக்கை தொடர்பாகவும் ஜப்பானிய தூதுவர் கவனம் செலுத்தினார்.
அமைச்சின் செயலாளர் உதயசூர்ய செனவிரத்ன உட்பட பலர் கலந்துகொண்டனர்.