News Update :

Follow on twitter

Follow on twitter

ads

ads
<>தற்போது கிடைத்த செய்திகள்>>

இலங்கை பட்டதாரிகளுக்கு எந்தவிடத்திலும் தொழில்புரியும் சிறப்புத்திட்டம்

உலகின் எந்தவொரு இடத்திலும் தொழில் புரியும் வகையில் பட்டதாரிகளை உருவாக்குவதற்கு தனியார் துறையின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள உயர்கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

பல்கழைகழக மாணவர்களுக்கு முதலாம் ஆண்டு முதல் செயற்பாடு ரீதியான பயிற்சிகளை வழங்குவதற்கு திட்டமிட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் நாயகம் கலாநிதி சுனில் ஜயந்த நவரத்ன தெரிவித்தார்.

இதன்படி எந்தவொரு சூழலிலும் பணியாற்றக் கூடிய வகையில் அவர்களது செயற்பாடு இயலுமையுடனான பட்டதாரிகளை உருவாக்குவதே, இதன் நோக்கம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய பல்கழைகழக மாணவர்களுக்கு ஆறு மாதங்கள் அல்லது ஒரு வருட பயிற்சிகளை வழங்க தனியார் துறையினர் இணங்கியுள்ளதாக உயர்கல்வி அமைச்சின் செயலாளர் மேலும் சுனில் ஜயந்த நவரத்ன தெரிவித்தார்
Share this Article on :

வினோதம்

Comments

 

© Copyright Sammanthurai News 2015| Design by | Published by www.sammanthurai.net | .