அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பிரதேசத்தில் திண்மக்கழிவு முகாமைத்துவ செயற்பாடு தொடர்பாக யுனொப்ஸ் அமைப்பின் சூழல் மீள்நிர்மாணத் திட்டத்தின் கீழ் இச்செயலமர்வு (29-03-2012) இன்று சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலகத்தின் கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.
இச்செயலமர்வின் வளவாளர்களாக யுனொப்ஸ் அமைப்பின் இயலுமை விருத்தி மற்றும் பயிற்சி உத்தியோகத்தர் ஏ.அரியசுதன், சம்மாந்துறை பிரதேச சபையின் உள்ளூராட்சி உதவி உத்தியோகத்தர் ஏ.எஸ்.எம்.நௌஷாட், பயிற்சி மற்றும் சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர் டீ.டிராஜ் உள்ளிட்ட பயிற்சியாளர்கள் கலந்து கொண்டனர்.