அம்பாறை மாவட்ட அபிவிருத்திக்கென இவ்வாண்டு 94.09 மில்லியன் ரூபா பொருளாதர அபிவிருத்தி அமைச்சினால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
இவ்வொதுக்கீட்டின் மூலம் இம்மாவட்டத்திலுள்ள 20 பிரதேச செயலாளர் பிரிவுகளும் 503 கிராம அலுவலகர் பிரிவுகளும் அபிவிருத்தி செய்யப்படுமெனவும் அவர் கூறினார்.
கிராமத்திற்கொரு வேலைத்திட்டத்திற்கென 50.30 மில்லியன் ரூபாவும் சமூக அபிவிருத்தி, புரநெகும, வாழ்வாதார மேம்பாடு அபிவிருத்திக்கென 43.79 மில்லியன் ரூபாவும் அமைச்சினால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.