அம்பாறை மாவட்டத்தில் தற்போது சீரான காலநிலை காணப்படுவதால் மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களில் பெரும்போக நெல் அறுவடை மேற்கொள்ளப்படுகின்றது.
சம்மாந்துறை, கல்முனை, நிந்தவுர், ஒலுவில்,அட்டாளைச்சேனை, திருக்கோவில், அக்கரைப்பற்று, இறக்காமம், பொத்துவில் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 90 ஆயிரம் ஹெக்டெயர் நெற்காணிகளில் பெரும்போக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.