இலங்கையின் 64ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று சம்மாந்துறை பிரதேச செயலகத்தினால் சுதந்திர தின நிகழ்வு கொண்டாடப்பட்டது.
இதன்போது,பிரதேச செயலாளர் ஏ.மன்சூர் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இதேவேளை,மௌலவி ஏ.முகம்மட்தம்பி துஆப் பிராத்தனை நடத்தப்பட்டு பின்னர் எமது நாட்டின் சுதந்திரத்துக்காக பாடுபட்டவர்கள் நினைவு கூறப்பட்டு உரைகளும் இடம்பெற்றது.