வீரமுனை சீர்பாததேவி சிறுவர் இல்லத்தின் 9ஆவது வருட சேவை நிறைவையும்,10ஆவது வருட சேவை ஆண்டின் ஆரம்ப நிகழ்வும் ஞாயிற்றுக்கிழமை 05.02.2012 இன்று ஸ்தாபக தலைவர் தா.விநாயகமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.
மேற்படி சிறுவர் இல்லம் கடந்த 2003ம் ஆண்டு பெப்ரவரி மாதம் ஆரம்பிக்கப்பட்டு இன்றுவரை 45மாணவர்கள் பயன்பெற்றுள்ளார்கள்.தற்போது 19சிறுவர்களுடன் இயங்கிவரும் இவ் இல்லலம் சிறுவர் பராமரிப்பு திணைக்களம் இனங்கண்டு அனுமதிக்கும் மாணவர்களுக்கு அடிப்படை வசதிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் வழங்கி வருகின்றது. இச் சிறுவர் இல்லத்தினால் ”மாணவர் கல்விக்கான நிதி உதவி” எனும் திட்டம் 2004 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
இத்திட்டத்தின் கீழ் கல்விக்கு தடையாக உள்ள வறுமையினை போக்க அம்மாணவர்ரின் சூழலுக்கு சென்று தேவையான உதவிகளை வழங்கி வருகின்ற பணி இடம்பெறுகின்றது.இத்திட்டத்தின் கீழ் மல்வத்தை புது நகரம், மல்லிகைதீவு, கணப்பதிபுரம், வளத்தாப்பிட்டி, வீரமுனை போன்ற பின்தங்கிய பகுதிகளில் உள்ள வறுமைக்குட்பட்ட பல மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர்.
இதன் இஸ்தாபக தலைவர் அவர்களின் கண்கானிப்பில் வீரமுனை சிறுவர் இல்லத்திற்காக இணையத்தளமொன்று ஆரம்பிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பித்தக்கது. இதன் முகவரி: http://www.schveeramunai.org/