வீடுகளுக்கு வரும் கணக்கெடுப்பு உத்தியோகஸ்தர்களை அணிந்திருக்கும் தொப்பி, அவர்கள் வைத்திருக்கும் சனத்தொகை, வீடுகள் தொகைமதிப்பு இலச்சினையுடன் கூடிய கோவை என்பவற்றின் அடையாளங்களாக காண முடியும் எனவும் மேற்படி உத்தியோகஸ்தர்கள் திணைக்களத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டைகளையும் வைத்திருப்பவர் எனவும் அவர் தெரிவித்தார்.
தேசிய அடையாள அட்டை இலக்கம், பிறந்த திகதி, மாவட்டம், கல்வித் தகைமைகள், தொழிற்பயிற்சி, தொழில்வாண்மை, கணினி அறிவு,தொழில்,பொருளாதார செயற்பாடுகள் பற்றிய விபரங்கள் திரட்டப்படவுள்ளதால் மக்கள இவற்றை ஆயத்தமாக வைத்திருப்பது வேலையை இலகுவாக்கும், மக்கள் வழங்கிய தகவல்களை திணைக்கள ஊழியர்கள் இரகசியமாக வைத்திருப்பதும் சட்டப்படி கட்டாயமானதாகும் என திணைக்களப் பணிப்பாளர் நாயகம் டி.பீ.பி. வித்தியாரட்ன கூறினார்.