புதிதாக அறிமுகப்படுத்தப்படவுள்ள பாடத்திட்டத்தின் கீழ்,ஆரம்பப்பிரிவு மாணவர்கள் 12 ஆம் வாய்ப்பாடு வரை மனனம் செய்ய வேண்டுமென கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன கூறினார்.' நாம் இந்தத் தவறை திருத்த வேண்டும். இந்தியாவில் 3 ஆம் வகுப்பு மாணவர்கள் 15 ஆவது பெருக்கல் வாய்ப்பாடுவரை மனனம் செய்ய வேண்டும். நாம் பெருக்கல் வாய்ப்பாட்டை மனனம் செய்யும் முறையை அறிமுகம் செய்யவுள்ளோம்' என அவர் கூறினார்.
அதேவேளை புதிய கல்விச்சீர்திருத்தத்தின் கீழ் 2015 ஆம் ஆண்டு க.பொத. உயர்தரப் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கு 5 துறைகளில் ஒன்றில் கல்வி கற்க வாய்ப்பு கிடைக்கும் என அவர் கூறினார்.அடுத்த வருடத்திலிருந்து, கணிதம், விஞ்ஞானம், கலை,வர்த்தகம்,தொழில்நுட்பம் ஆகிய 5 பிரிவுகளில் மாணவர்கள் கல்வி கற்பர். இவர்கள் 2015 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை எழுதவுள்ளனர்.